Sri:
மேலும் சில பொதுவான சிறப்பம்சங்கள் :
ஆங்காங்கே இடம் உள்ள இடங்களில் எல்லாம் ஆஸ்திகர்களுக்குத் தேவையான மிக முக்கிய தகவல்களான:
1. ஜன்ம - அநுஜன்ம - த்ரிஜன்ம நக்ஷத்திரங்களில் செய்யத் தகுந்தவை தகாதவை பற்றிய தகவல்கள்.
2. குளிகை காலத்தில் செய்யத் தக்கவை - தகாதவை
3. நாழிகை - மணி - மணி -நாழிகை மாற்ற எளிய கணக்கு
3. மரணத்தில் தீட்டு விஷயம் (யார் யாருக்கு எத்தனை நாள் தீட்டு)
4. அதுபோல் ஜனனத்தில் யார் யாருக்கு எவ்வளவு நாள் தீட்டு
5. தீட்டு, தோஷம் போக - பஞ்சகவ்ய ஸம்மேளனம் செய்யும் முறை மந்திரத்துடன்.
6. தனிஷ்டா பஞ்சமி, மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் விபரங்கள்.
7. அக்னி நக்ஷத்திர காலங்களில் செய்யத் தகுந்தவை, தகாதவை.
8. ஒரு வருடம் முழுமைக்கும் அமாவாசை, மாதப் பிறப்பு, மஹாளய தர்பண சங்கல்பங்களில் மாற்றிக்கொள்ளவேண்டிய தகவல்கள்
- கையடக்கமாக ஒரே பக்கத்தில் (இதை மட்டும் ஜெராக்ஸ் எடுத்து லேமினேட் செய்து வைத்துக்கொண்டால் ஒரு வருடத்துக்கும் உபயோகமாக இருக்கும்).
9. யஜூர் உபாகர்மா மந்த்ரங்கள் அந்தந்த வருடத்திற்குறிய மாற்றங்களுடன், சங்கல்பம் மற்றும் காண்டருஷி தர்பண மந்த்ரங்கள்.
10. காயத்ரி ஜப சங்கல்பம்.
11. நடப்பு வருடத்திற்குறிய முஹூர்த்தங்கள் அந்தந்த மாதத்திற்கான பக்கங்களிலேயே வழங்கப்பட்டிருப்பதுடன்,
அடுத்த ஒரு வருடத்திற்கான முஹூர்த்தங்கள் 19ம் பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும். (இந்தத் தகவலை வழங்கும் ஒரு சில பஞ்சாங்கங்கள் கூட கார்த்திகை (டிசம்பர்) மாதம் வரைதான் முஹூர்தங்களை வழங்குகின்றன. ஆனால் நாம் அடுத்த பங்குனிவரை முஹூர்த்தங்களை வழங்குவதுடன். அடுத்த வருட 12 மாதங்களுக்கான க்ரஹ நிலைக் கட்டங்களையும் க்ரஹபாத சாரத்துடன் வழங்குகிறோம் என்பது மிக மிக குறிப்பிடத்தக்கதாகும்.
12. நமது சொந்தக் கண்டுபிடிப்பான ச்ராத்த திதி அட்டவணை, இதுவரை வேறு எந்த பஞ்சாங்கத்திலும் காண இயலாது. ச்ராத்த திதியை கண்டுபிடிப்பதில் பெரும்பான்மை ஆஸ்திகர்களுக்கும் மிக சிரமம் உள்ளது. எனவே சுக்ல - க்ருஷ்ண - ப்ரதமை முதல் பௌர்ணமி - அமாவாசை வரை இடது பக்கம் மேலிருந்து கீழாகவும், சித்திரை முதல் பங்குனி வரை மேலே இடமிருந்து வலமாகவும் குறிப்பிட்டு, அந்தந்த திதி அந்தந்த மாதத்தைச் சந்திக்கும் இடத்தில் ச்ராத்திற்கான சரியான தேதி குறிப்பிடப்பட்டிருக்கும் இதனால் சுலபமாக ச்ராத்த திதியைக் கண்டறியலாம். சில சமயம் ஒரு ச்ராத்தத்தின் திதி அந்த மாதத்தில் இடம்பெறாமல் முன் மாதம் அல்லது அடுத்த மாதத்தில்கூட பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும், சில சமயம் மாதத்தின் ஆரம்பத்திலும், மாதத்தின் கடைசியிலும் இரு முறை ச்ராத்த திதி குறிப்பிடப்பட்டு உள்ளே உள்ள விபர பகுதியில் இது அடுத்த மாதத்திற்குறியது என்று குறிப்பிட்டிருப்பார்கள், அதை கவனிக்கத் தவறினால் குழப்பமே மிஞ்சும்.
மேலும் தயார், தகப்பனார் மாஸ்யங்களைச் செய்யும் கர்த்தாக்களுக்கும், வாத்யார்களுக்கும் இது மிக மிக உதவிகரமாக அமையும். ஏனெனில் ஒருவர் க்ருஷ்ண அஷ்டமியில் பரமபதித்தால் அவருக்கான ஒரு வருடத்திற்கான திதிக்குறிய தேதிகளை ஒரு வரியில் உள்ளதால் சில நொடிகளில் குறித்துக்கொள்ளலாம்.
இங்கே வழங்கப்பட்டுள்ளவற்றில் பெரும்பாலான தகவல்கள் மற்ற பெயர்பெற்ற பஞ்சாங்கங்களில் காண இயலாது.
நம் பஞ்சாங்கத்தின் பெருமைகள் மேலும் தொடரும் ......
NVS