மார்கழி மாத பூஜைகள்..
This thread is located at
http://www.brahminsnet.com/forums/showthread.php/6304-மார்கழி-மாத-பூஜைகள்
Here is the message that has just been posted:
***************
மார்கழி மாத பூஜைகள்.
16-12-2013 முதல் 13-01-2014 முடிய தனுர் மாத உஷஹ் கால பூஜை செய்ய வேண்டும்.இது தேவர்களுக்கு அதிகாலை நேரம்.. கோதண்டஸ்தே ஸவிதரி ப்ரத்யூஷே பூஜநாத் ஹரே: ஸஹஸ்ராப்தா அர்சன பலம் தினேநைகேந.ன லப்யதே
என்பதாக கோதண்டம் எனும் தநுர் ராசியில் ஸுர்யன் சஞ்சரிக்கும் மார்கழி மாதத்தில் விடிய காலையில் , ஒரு நாள் ஶ்ரீ மஹாவிஷ்ணுவை பூஜை செய்தால் ஆயிரம் வருஷம் மஹா விஷ்ணுவை
பூஜை செய்த பலன் கிடைக்கும்.. ஒரு நாளாவது அதிகாலையில் ஸ்நானம் செய்து வீட்டில் பஞ்சாயதன பூஜை சாள்கிராம பூஜை செய்யலாமே.
ஶ்ரீ ஆண்டாள் அருலிய திருப்பாவை 30 பாட்டுக்களையும், திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி தினமும் காலையில் படிக்கலாமே. தம் தம் வழக்கப்படி
சிவ பூஜை அல்லது விஷ்ணு பூஜை தினமும் அதிகாலையில் ஸ்நானம் செய்து விட்டு செய்யவும். ஆலயங்களுக்கு செல்லவும்.அபிஷேக ஆராதனை பார்க்கவும்.
உஷ: காலே து ஸம்ப்ராப்தே போதயித்வா ஜகத்பதிம் ஸமப்யர்ச்சய பஜேத் விஷ்ணும் ஜகதாம் தோஷ சாந்தயே.
ஸூர்ய உதயத்திற்கு முன்பாக மஹாவிஷ்ணுவிற்கு அபிஷேகம் , துள்சியினால் அர்ச்சனை செய்து பயத்தம் பருப்பால் செய்த பொங்கலை
நிவேதனம் செய்து பூஜை செய்தால் அந்த் க்ராமத்திற்கும், அங்கு வஸிக்கும் மக்களுக்கும் ப்ராணிகளுக்கும் தோஷம் விலகி நன்மை உண்டாகும் என்கிறது சாஸ்த்திரம். ஆதலால் கோவில்களில் பூஜை செய்கிறார்கள்.
வீட்டில் செய்யும் தினசரி பூஜையையும் அதிகாலையில் தினமும் செய்யலாம்.காலை 6 மணிக்குள் அபிஷேகம், அலங்காரம் வரை செய்துவிட்டு
ஸூர்ய உதயத்திற்கு பிற்கு அர்ச்சனை நைவேத்யம் செய்து வருவது
வழக்கத்தில் உள்ளது. இதனால் நிவேதனத்திற்கு யாதயாமதோஷம் (பழமை) வராது. ஸூரிய உதயம் இந்த மாதத்தில் காலை 6-28 முதல் 6-40 வரை உள்ளது.
16-12-2013. தத்தாத்ரேயர் ஜயந்தி.
17-12-2013. சர்பப்பலி உத்ஸர்ஜனம்.
17-12-2013. லவண தானம். இன்று உப்பு தானம் செய்வதால் அடுத்த பிறவியில் மிக அழகாக பிறப்பீர்கள்.
18-12-2013 திருவாதிரை.
19-12-2013- பரசுராமர் ஜயந்தி.
24-12-2013. திஸ்ரேஷ்டகா
25-12-2013 அஷ்டகா
26-12-2013 அன்வஷ்டகா
31-12-2013 க்ருஷ்ண அங்காரக சதுர்தசி. யம தர்பணம் செய்ய வேண்டும்.பிறகு யமோ நிஹந்தா என்பதாகிய பத்து நாமங்களையும் சொல்லி , நீல பர்வத ஸங்காசோ என்பதாகிய வாக்கியங்களை சொல்லி நமஸ்கரிக்க வேண்டியது..
1-1-2014 ஹனுமான் ஜயந்தி; அமாவாசை.
5-1-2014 மஹா வ்யதீ பாதம்
11-1-2014. வைகுண்ட ஏகாதசி.
13-01=2014. போகி பண்டிகை.
மஹா வ்யதீ பாதம். இருபத்தேழு ந்க்ஷத்திரங்கள் இருப்பது போல் 27 யோகங்கள் உண்டு. இதில் ஒன்று வ்யதீ பாத யோகம். வருடத்திற்கு 96 தர்பணங்கள் செய்பவர்கள் ஒவ்வொரு வ்ய்தீ பாத யோகத்தன்று தர்பணம் செய்ய வேண்டும்.
மார்கழி மாத வ்யதீபாதத்திற்கு மஹா வ்யதீ பாதம் என்றும், தநுர் வ்யதீ பாதம் என்றும் அழைப்பர் .இந்த நாளில் காலை நித்ய கர்மா முடித்துவிட்டு ஒரு செம்பு (காப்பர்) தாமிர பாத்திரத்தில் நாட்டு சக்கரையை நிரப்பி அதன் மேல் தங்கம் அல்லது வெள்ளி ப்ரதிமையில் வ்யதீபாதம் ஆவாஹ்யாமி என்று ஆவாஹனம் செய்து ஸ்மராம் யஹம் வ்யதீபாதம் வீதஹவ்யாந்வயோத்பவம். ப்ரத்யங்முகம் பாடயந்தம் வேதாந் சிஷ்யாநஹர்நிசம்.
ஓம் பூ: வ்யதீபாதம் ஆவாஹயாமி; ஓம் புவ: வ்யதீபாதம் ஆவாஹயாமி; ஓம் ஸுவ: வ்யதீபாதம் ஆவாஹயாமி. ஓம் பூர்புவஸ்ஸுவ: வ்யதீபாதம் ஆவாஹயாமி. ஓம் நமோ வ்யதீபாதாய
என்று பூஜையும் ஜபமும் செய்யவும்.16 உபசார பூஜை செய்யவும்.ஓம் வ்யதீபாத தே நம: என்று 108 முறை ஜபிக்கவும்.சக்திக்கு தகுந்தவாறு தானம் செய்யவும்.
சந்திர க்ரஹணம், வ்யதீபாதம் போன்ற நாட்களில் செய்யும் தானம் எண்ணிலடங்கா பலனை வாரி வழங்கும்..ஏழைகளுக்கு தானம் செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள், கார்ய ஜயம், விரும்பிய அனைத்தும் கிட்டும் என்கிறது புராணம்.
வ்யதீபாத தினத்தில் செய்யும் ஜபம், பூஜை, தானம், ஹோமம், இவைகளுக்கு அளவற்ற பலன் உண்டு. அதிகாலையில் சங்கல்பம் செய்துகொண்டு ஸ்நானம் செய்யவும்.
5-1-2014 வ்யதீ பாத பூஜை ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் வ்யதீபாதத்தன்று இம்மாதிரி பூஜை செய்து அடுத்த மார்ழியில் முடிக்கவேண்டும்.உத்யாபன பூஜை செய்து ப்ரதிமை தானம், படுக்கை தானம் அன்ன தானம் பஞ்ச தானம் செய்ய வேண்டும். .
இவ்வாறு செய்பவர்களுக்கு நல்ல புத்ரன். சுகமான வாழ்க்கை, பிறிந்த உற்றார் உறவினர் சேர்க்கை போன்றவை ஏற்படும்.
***************