Friday, 14 March 2014

கடல்களைப்பற்றி அறிவோம்.

​​
கடல்களைப்பற்றி அறிவோம்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6964-கடல்களைப்பற்றி-அறிவோம்

Here is the message that has just been posted:
***************
_*அந்த ஏழு கடல்கள் !*_

ஐரோப்பிய இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஏழு கடல்கள் , ' பாரசீக வளைகுடா, கருங்கடல், காஸ்பியன் கடல், செங்கடல், மத்தியதரைக் கடல், அட்ரியாடிக் கடல், அரபிக் கடல் ஆகியவை .
அரேபியர்களின் ' ஆயிரம் இரவு ' கதைகளின்படி, ' அரபு நாட்டில் இருந்து சீன தேசத்துக்குப் போக பாரசீக வளைகுடா, கம்பத் வளைகுடா, வங்காள விரிகுடா, மலாக்கா ஜலசந்தி, சிங்கப்பூர் ஜலசந்தி, தாய்லாந்து வளைகுடா, தெற்கு சீனக் கடல் ஆகிய ஏழு கடல்களைக் கடந்துதான் செல்ல வேண்டும் என்ற குறிப்பு காணப்படுகிறது

காலனி ஆதிக்கச் சமயத்தில் ஐரோப்பியர்கள் கீழை நாடுகளான இந்தோனேஷியாவைத் தேடி வந்தபோது, பாண்டா கடல், செலிபஸ் கடல், ஃப்ளோர்ஸ் கடல், ஜாவா கடல், தெற்கு சீனக் கடல், சுலூ கடல், டைமோர் கடல் போன்ற ஏழு கடல்கள் வழியாகத்தான் வந்தார்களாம் ..
நவீனயுகத்தில் வட, தென் அட்லான்டிக் பெருங்கடல்கள், வட, தென் பசிபி பெருங்கடல்கள், இந்தியப் பெருங்கடல்கள், அண்டார்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல்கள் ஆகிய ஏழு பெருங் கடல்களையே பிரதான கடல்கள் என்கிறார்கள்
​**************
_*கடல் எல்லை....பெரும் தொல்லை !*_
ஒவ்வொரு நாடும் , அதன் கடற்கரையில் இருந்து 12 நாட்டிகல் மைல் தூரத்தைத் தன் எல்லையாக்கிக்கொள்ளலாம் . 12 நாட்டிகல் மைல் என்பது உத்தேசமாக 22.2 கி. மீ. தூரம் . இந்த 22 கி. மீ. தூரத்துக்கும் முதலாளி அந்த நாடு தான் . ஆனால் , இந்த வழியாக பிற நாட்டுக் பயணக் கப்பல்கள் போன்றவை செல்லலாம் . ஒருவேளை 22 கி. மீ.க்குள் இன்னொரு நாட்டின் எல்லை வந்தால் என்ன செய்வது ? அதுதான் நமக்கும் இலங்கைக்கும் உள்ள பிரச்னை .

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 30 கி. மீ.தான் . இரண்டு நாட்டின் கடல் எல்லைகளும் ஒன்றின் மீது ஒன்றாக இருக்கின்றன . இத்தகைய சூழலில் இரு நாடுகளும் தங்களுக்குள் பேசி எல்லையை ஆளுக்குப் பாதியாக எடுத்துக்கொள்ள வேண்டும் .
'எனக்கு 22 கி. மீ. தேவை இல்லை . கொஞ்சம் போதும் ' என நினைத்தால் பிரச்னை இல்லை . சிங்கப்பூர் , ஜோர்டான் போன்ற நாடுகள் எல்லாம் ' எங்களுக்கு 6 கி. மீ. தூரம் போதும் ' என விரும்பி ஏற்றுக்கொண்டு இருக்கின்றன . இரண்டு நாடுகளுமே எனக்கு அதிகம் இடம் வேண்டும் என குடுமிப்பிடி சண்டை போட்டால் நிலைமை சிக்கலாகும் .

இந்த 22 கிலோ மீட்டரையும் தாண்டி இன்னும் ஒரு 22 கி. மீ. தூரத்தை நாடுகள் தங்கள் ' கண்காணிப்பில் ' வைத்திருக்கலாம் .இது பெரும்பாலும் போர்கள் அண்டை நாடுகளிலிருந்து வரும் ஆபத்து போன்ற சிக்கல்களுக்காக ஏற்படுத்தப்பட்டது . கடலில் ரோந்து போக வேண்டும் , தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றால் இந்த எல்லையைப் பயன்படுத்தலாம் .

இந்த இரண்டு எல்லைகளையும் தாண்டி , மூன்றாவதாக ஓர் எல்லையும் உண்டு . அது பொருளாதார எல்லை . கரையில் இருந்து சுமார் 393 கி. மீ. தொலைவில் உள்ள எல்லா கடல் வளங்களும் அந்த நாட்டுக்கே சொந்தம் . வேறு நாடுகள் கப்பல் ஏறி வந்து உரிமை கொண்டாடமுடியாது . மீன் பிடிப்பது, பெட்ரோல் எடுப்பது போன்ற சகல பொருளாதார உரிமைகளுக்கும் கடிவாளம் அந்தந்த் நாட்டிடமே . இதற்கு மேலும் எல்லையை நீட்டிக்க விரும்பினால், சர்வதேசக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும் .
***************
_*பூமியில் உள்ள உயிர்களில் 99 சதவிகிதம் கடலுக்குள்தான் இருக்கின்றன *_.

* கடலின் ஆழமான பகுதி பசிபிக் கடலில் இருக்கிறது . இதன் ஆழம் 11 கி. மீ.க்குக் கொஞ்சம் அதிகம் . எவரெஸ்ட் சிகரத்தைத் தூக்கி அந்த இடத்தில் போட்டால்கூட அது கடல் மட்டத்தில் இருந்து இரண்டே கால் கி. மீ. உள்ளேதான் இருக்கும் !

* 1,459 - க்கு பின்னால் 15 பூஜ்யங்களைப் போடுங்கள் . அதுதான் கடலின் எடை . பூமியின் மொத்த எடையில் இது வெறும் 0.022 சதவிகிதம்தான் !
* 90 சதவிகித எரிமலைகள் கடலில்தான் இருக்கின்றன .
* 6,400 கி. மீ. நீளமுள்ள அமேசான் நதி அட்லாண்டிக் கடலில் விநாடிக்கு 35 லட்சம் கன அடி பாய்கிறது . இந்த இடத்தில் கடல் தண்ணீர் உப்புக் கரிக்காது !

Source:K.Santhanam
***************

No comments:

Post a Comment