Wednesday, 27 August 2014

ஆகாச தீபம் 24-10-14 முதல்

ஆகாச தீபம் 24-10-14 முதல்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8445-ஆகாச-தீபம்-24-10-14-முதல்

Here is the message that has just been posted:
***************
ஆகாச தீபம் கடனை போக்கும்: 24-10-2014 முதல் 22-11-2014 முடிய.

கார்த்திகே தில தைலேன ஸாயங்காலே ஸமாகதே ஆகாச தீபம் யோதத்யாத்  மாஸமேகம் ஹரிம் ப்ரதி மஹதீம் ஶ்ரீய மாப்நோதி ரூப செளபாக்கியம் ஸம்பதம் ( நிர்ணய ஸிந்து- 146 ).

சாந்திரமான கார்த்திகை மாதம்  முழுவதும் ஸாயங்காலம் ஸூர்யன் அஸ்தமிக்கும் வேளையில் தனது வீட்டுக்கு அல்லது ஆலயத்துக்கு

 அருகில்   உயரமான ஒரு ஸ்தம்பம் நட்டு அதன் நுனியில் எட்டு திரியுள்ள ஒரு விளக்கு நல்லெண்ணை விட்டு ஏற்றி வைக்க வேண்டும்.

அல்லது தனது வீட்டு மொட்டை மாடியில் உயரமான இடத்திலும் ஏற்றி வைக்கலாம் இதன் ஒளியானது எட்டு திசையும் பரவ வேன்டும்.

24-10-2014 ஸூர்யன் மறைந்த பின்  அஹம் ஸகல பாபக்ஷய பூர்வகம் ஶ்ரீ ராதா தாமோதர ப்ரீதயே அத்ய ஆரப்ய கார்த்திக அமாவாஸ்யா பர்யந்தம் யதா சக்தி ஆகாச தீப தாநம் கரிஷ்யே என்று ஸ்வாமி சன்னதியில்

 ஸங்கல்பம் செய்துகொண்டு , மண் அகல் விளக்கில் நல்லெண்ணைய் விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி அருகில் உள்ள ஆலயத்தில் அல்லது தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில்  தாமோதராய நபஸி துலாயாம்

லோலயா ஸஹ ப்ரதீபம் தே ப்ரயச்சாமி நமோ நந்தாய வேதஸே (நிர்ணய ஸிந்து)) எனும் ஸ்லோகம் சொல்லி வைத்து  நமஸ்காரம் செய்யலாம். .
அனைத்து கடன்களும் விலகும். லக்ஷிமி கடாக்ஷம் ஏற்படும்.

 எல்லா நாட்களும் முடியாவிட்டாலும் முடிந்த நாட்களில் ஏற்றி வைத்தாலும் அந்த அளவிற்கு துன்பங்கள் விலகுமே. .

தடித்த துணியாலான திரி தான் மொட்டை மாடியில் எரியும். ஒரே விளக்கில் எட்டு திரி போட வேண்டும்.

ஆதலால் மண் பானையை மூடும் மண் தட்டு மாதிரி பெரிதாக இருக்க வேண்டும் அகல் விளக்கு.  காற்றில் அணையாமல் எரிய வேண்டுமே..
***************

No comments:

Post a Comment