ஹோமங்கள்.This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8889-ஹோமங்கள்
Here is the message that has just been posted:
***************
ஹோமங்கள்ஹோமம் நடத்துவது ஏன்? காலம் மாறும்போது எல்லா துறைகளிலும் திருப்பங்கள் நிகழும். உலகில் இயற்கை சூழ்நிலைகள் மாறும். இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஹோமங்களை நடத்த வேண்டும். இறைவன் ஹோமங்கள் மூலமாக நமது கோரிக்கையை அறிந்து கொள்கிறான். அக்கோரிக்கைகள் அக்னிகுண்டங்கள் மூலமாக இறைவனை சென்றடைவதாக நம்பிக்கை. எனவே தான் ஹோமம் நடத்தப்படுகிறது.
முக்கிய ஹோமங்கள்
கணபதி ஹோமம் (தடைகள் நீங்க)
அவஹந்தி ஹோமம் (விவசாயம்)
ஆயுஷ்ய ஹோமம் (குழந்தைகளுக்கு)
மிருத்தியஞ்ச ஹோமம் (ஆயுள் விருத்தி)
லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)
வித்யா ஹோமம் (கல்வியில் மேன்மை)
மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)
கனகதாரா ஹோமம் (திறமையை வெளிப்படுத்த)
லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)
சர்வமங்களங்களையும், மேன்மையையும், 16 செல்வங்களையும் அடையவும், நீண்ட நாள் வராதிருந்த பொருள் வந்துசேரவும், ஐஸ்வர்யம் அடைய தடையாக இருக்கும் எதிர்மறை சக்திகள், சாபங் களை நீக்கி செல்வ விருத்திக்கு வழிவகுக்கவும் "லட்சுமி ஹோமம் செய்ய வேண்டும்
மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)
திருமணம் ஆகி நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகள் நடத்த வேண்டிய ஹோமம் மங்கள சமஸ்கரண ஹோமம் ஆகும். குழந்தை பாக்கியம் பெறவும், நம் அனைத்து செயல்களிலும் வெற்றிபெறவும், குடும்பச் சூழலிலிருந்து தப்பி பரிபூரண விடுதலை பெறவும் இந்த ஹோமத்தை நடத்தலாம்.
அக்னியின் பெருமை
ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னியை சாதாரண நெருப்பாகக் கருதக்கூடாது. அக்னிதேவன் மற்ற தெய்வங்களின் தூதர் போலவும், அவர்களது வாய் போலவும் செயல்படுகிறார். மனிதன் மற்ற தெய்வங்களுடன் தொடர்பு கொண்டு பேச அக்னியை பயன்படுத்திக் கொள்கிறான். உணவும் அக்னி மூலமே கொடுக்கப்படுகிறது.
***************
No comments:
Post a Comment