இன்று தொடங்கி சிறிது சிறிதாக மந்திர அர்த்தங்களை அனுப்பி வைக்கிறேன்.
குறிப்பு:- உ, ஊ, க்ஷே இந்த ஒலிகள் சரியாக இருக்காது.
விவாஹ மந்த்ரங்களை இந்த்ரன் அநுக்ரஹிக்க ஹேது
விவாஹ மந்த்ரார்த்தம்
முதல் ப்ரச்நம் - முதல் கண்டம்
வரப்ரேஷணமாவது விவாஹம் செய்துகொள்ள விரும்புகிறவன் நல்ல ப்ராஹ்மணர்களை பெண் பார்த்து வரச்சொல்லி, (நல்ல பெண் கிடைத்ததும்) அவள் பெற்றோரிடம் இது விஷயமாகப் பேசி முடித்து வருவதற்காக அனுப்புவதே வரப்ரேஷணம் ஆகும்.
ப்ரஸ{க்மந்தா :- துரிதமாகச் செல்லக் கூடியவர்களும் எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வல்லவர்களும் ஆன ப்ராஹ்மண உத்தமர்களே! நீங்கள் உடனே புறப்பட்டுச் சென்று கன்யையின் பிதாவைச் சந்தியுங்கள். அந்த கன்யையை நான் மணப்பதை இந்த்ர தேவனும் விரும்பி அநுக்ரஹிக்கிறான். ஏனெனில், கல்யாணமாகி தம்பதிகளாக நாங்கள் நடத்தப் போகும் ஸோம யாகத்தில் இந்த்ரனின் ப்ரீதிக்கான ஆகாரங்களை அளிப்போம் என்பதை அவன் அறிந்துள்ளான்.
தனக்காகப் பெண் தேடப்போகும் ப்ராஹ்மணர்களுக்கு வழியில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் இருக்க தேவதைகள் ப்ரார்த்திக்கப்படுகிறார்கள்.
அந்ருக்ஷரா: :- ஓ தேவதைகளே! எனக்காகப் பெண் தேடச் செல்லும் ப்ராஹ்மணர்கள் செல்லும் வழியில் கல், முள் போன்ற தொந்திரவுகள் ஏதுமின்றி நல்ல பாதையாக இருக்கச் செய்யுங்கள். அர்யமா, பகன் போன்ற தேவதைகள் எங்கள் தாம்பத்திய கோரிக்கையை நிறைவேற்றி வைக்கட்டும்.
கல்யாணம் நிச்சயமானபின் வரன் கன்னிகையைப் பார்;துச் சொல்லும் மந்திரம்:
அப்ராத்ருக்நீம் :- அப்ராத்ரு, அபதி, அபுத்ர என ஸஹோதரர்களின் நலனுக்காகவும், கணவனாகிய தன்னுடைய நலனுக்காவும், பெறப்போகும் புத்ரர்களின் நலனுக்காகவும் முறையே வருணன், ப்ருஹஸ்பதி, இந்ரனாகிய தேவர்களிடம் ப்ரார்த்தித்து இந்தக் கன்னிகையிடம் ஏதேனும் தோஷமிருந்து மேற்சொன்னவர்களை பாதிக்கக்கூடுமானால் அவற்றை நீக்கி நல்ல சுபலக்ஷணங்களை அளித்து அனைவருக்கும் Nக்ஷமத்தை ப்ரார்த்திக்கிறான்.
பெண்ணின் ஒவ்வோர் அங்கத்தையும் வரன் பார்ப்பதற்கான மந்த்ரம்:
அகோர சக்ஷ{: :- ஏ பெண்ணே! உன் கண்களால் பார்க்கப்படும் பார்வை தோஷங்களற்றவையாகவும் மங்களகரமாகவும் இருக்கட்டும். உன் கணவனை துன்புறுத்தாதவளாய் இரு. கணவனுக்கும், கணவனின் ஸஹோதரர்களுக்கும் இசைவான கருத்துடையவளாக விளங்குவாயாக. து}ய நல்லெண்ணங்கள் கொண்டவளாயிரு.
No comments:
Post a Comment