Wednesday, 27 June 2012

விவாஹ ஹோமம், அம்மி மிதித்தல், பொரி ஹோமம் - மந்த்ரங்களுக்கு அர்த்தம்

Sri:
அம்மி மிதித்தல், பொரியிடல் (பொரி ஹோமம்) வரையிலான மந்த்ரங்களுக்கு அர்த்தம் கொடுத்துள்ளேன்

16 விவாஹ ஹோம மந்த்ரங்கள்
1. ஸோமாய ஜநிவிதே .... 'பெண்ணுக்கு சோபை அளித்த ஸோமனுக்கு"
2. கந்தர்வாய ... 'யௌவனத்தை வழங்கிய கந்தர்வனுக்கு"
3. அக்நயே .... 'நல்ல ரூபத்தை வழங்கிய அக்நி தேவனுக்கு"
4. கந்யலா ... 'இந்த கந்யை பித்ரு குலத்திலிருந்து பர்தாவின் குலத்திற்குச் செல்கிறாள் அங்கும் அவள் நலமுடன் இருக்க ப்ரார்தனை"
5. ப்ரோதோமுஞ்சாதி ... 'பித்ரு குலத்திலிருந்து விடுவித்து பதிகுலத்தில் வேரூன்றி, அங்கு புத்திரர்களையும், ஐஸ்வர்யத்தையும் பெற்று விளங்க இந்திரனின் அருளுக்காக"
6. இமாந்த்வமிந்த்ரம்... 'இந்த்ர தேவா! இவள் பத்து பிள்ளைகளைப் பெற்றாலும் அதன்பிறகும் பதியிடம் அலுப்புத்தோன்றாமல் புதிதாகப் பிறந்த பதினோராவது பிள்ளைபோல் பாவிக்கும்படி அருள்வாயாக"
7. அக்நிரைது ... 'அக்நி, வருண தேவர்கள் இவள் பெற்ற பிள்ளைக்கு மரணம் சம்பவிக்காமலும், அதுபற்றிய பயமும் இந்த கன்னிகைக்கு இல்லாமல் எப்போதும் சுகித்திருக்க அருள்வீராக"
8. இமாமக்நிஸ்த்ராயதாம் .... 'இவள் மடியில் எப்போதும் பிள்ளை உள்ளவளாகவும், பிள்ளைகளின் உடல்நலம் குறித்த பயமின்றி, அநுதினமும் ஆனந்தத்துடனேயே வாழக்கூடியவளாயும் அருள அக்நிதேவனையும், க்ருஹபதி தேவனையும் வேண்டுகிறேன்"
9. மாதே க்ருஹே ... 'இந்த வதுவானவள் நள்ளிரவில் துக்கஸம்பவத்திற்காக ஓலமிடும் அவலமின்றி, புத்ர, பௌத்ராதிகளுடன், சுமங்கலியாக, பதியை பிரியாதவளாய் வாழ்நாள்வரை விளங்க அனைத்து தேவதைகளும் அருள்புரியவேண்டும்".
10. த்யௌஸ்தே... 'இக்கன்னியின் பின்புறத்தை ஆகாசமும், துடைகளை வாயுவும், ஸ்தனங்களை அச்விநீ தேவர்களும் காப்பாற்றட்டும். மேலும் இவளை ப்ருஹஸ்பதி, விச்வேதேவர்களும் ரக்ஷிக்கட்டும், இவள் குழந்தையை ஸவிதா (சூரியன்) ரக்ஷிக்கட்டும்.
11. அப்ரஜஸ்தாம் ... 'வாடிய புஷ்பத்தை எடுத்து வேறு இடத்தில் எறிவதுபோல், உன்னிடம் மலட்டுத்தன்மை, கணவனை, குழந்தைகளை பாதிக்கும் தோஷங்கள் எது இருந்தாலும் அவை சத்ருக்களிடத்தை சென்றடையட்டும்"
12, 13. இமம்மே வருண, தத்வாயாமி... 'வருண தேவனை ஸ்துதி செய்கிறேன், இதுவரை நான் ப்ரார்தித்த அனைத்தும் விரைவில் நிறைவேற அருள்புரியும் என்று, வருணன் குற்றங்களைப் பொறுத்து, கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றை அவற்றை அனுபவிக்க தீர்காயுளையும் கொடுப்பாராக.
14. த்வந்நோ, 15.ஸத்வந்நோ அக்நே, 16. த்வமக்நே .... 'அக்நிதேவன் மற்ற தேவர்களுக்கு வழங்கப்படும் ஹவிஸ்ஸை சுமந்து செல்பவர், அதனால் அந்த அக்நிதேவன் வருண தேவனை நிர்பந்தித்து என் கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்யவேண்டும். மேலும் அக்நி பகவாந் எப்போதும் நாங்கள் அளிக்கும் ஹவிசுகளைப் ஏற்றுக்கொண்டு எங்களுக்கு நல்லாசிகள் வழங்கிக்கொண்டிருக்கவேண்டும்.

அஸ்மாரோஹணம் (அம்மி மிதித்தல்)
ஆதிஷ்டேமம் அஸ்மாநம் அஸ்மேவத்வம் ஸ்திராபவ. அபிதிஷ்ட ப்ரதந்யத: ஸஹஸ்வ ப்ரதநாயத:.
'ஹே வதுவே நீ இந்த பாரங்கல்லின் ஏறி நில். இதனால் அதன் உறுதித்தன்மை உனக்குப் புலனாகும்.  நீ உறுதியிலும், பொறுமையிலும் இந்த கல்லைப்போல் இருருந்து, உன்னை எதிர்ப்பவர்களிடத்தும், உன் நற்பண்புகளை குலைத்துக் கெடுவழியில் இட்டுச்செல்பவர்களிடத்தும், குடும்பத்துக்கு கேடுவிளைவிக்கும் சத்ருக்களிடத்தும் உறுதி, பொறுமை காத்து வெல்வாயாக. நம்மிருவரிடையே இந்த திருமண  பந்தத்தால் ஏற்பட்ட நல்ல நட்பிலும் இந்த உறுதித்தன்மையை காத்துவருவாயாக. 
லாஜஹோம் (பொறி இடுதல்)
இந்தப் பொறி இடுதல் என்னும் வழக்கம், அக்கினியின் முன்னால் தம்பதிகள் உட்கார்ந்திருக்க, பெண்ணின் சகோதரன் நெற்பொறியை எடுத்து இரண்டு தடவை பெண்ணின் இரு கைகளிலும் போட வேண்டும்.  இரு கைகளிலும் ஏந்தி வாங்கிக் கொண்ட அந்தப் பொறியை, மணமகன் மனமகளின் கையைப் பிடித்து அக்கினியில் சேர்ப்பிக்க வேண்டும்.  இந்த லாஜஹோமம் என்பது சூரியனை உத்தேசித்துச் செய்யப்படுவதாகும்.  சூரியன் உலகத்தில் முதற் பிரகாசமான கடவுளாகக் கீர்த்தியோடு பிரகாசிப்பதைப் போன்று தன் கணவனும் சகல கீர்த்திகளோடு பிரகாசிக்க வேண்டுமென்ற பெண்ணின் பிரார்த்தனையும், சூரியனோடு இணை பிரியாதிருக்கும் சாயாதேவி போன்று தாமும் ஒற்றுமையாகப் பிரியாது எந்தக் காரியத்தையும் நிறைவேற்ற வேண்டுமென்ற வரனின் ஸங்கல்பமுமாக இந்த ஹோமத்தின் தத்துவம் கூறப்படுகிறது. மூன்று ஹோமம்.
1. இயம் நாரி ... பொரியினால் ஹோமம் செய்யும் இந்து வது தன் கணவன் நூறு வருடங்கள் ஜீவித்திருக்கும்படி அக்கிதேவனை வேண்டிக்கொள்கிறாள்.
2. அர்யமணம் நுதேவம் ... அர்யம தேவனை பொரியினால் பெண்கள் யாகம் செய்து பயனடைந்துள்ளனர். அதுபோல் இந்த வது அர்யம தேவனுக்கு இந்த பொரிஹோமத்தைக் காணிக்கையாக்கி பித்ருகுலத்திலிருந்து பதிகுலத்திற்கு வந்துள்ள என்னால் இந்தகுலத்திற்கு எல்லா நன்மைகளும் ஏற்படவேண்டும் என ப்ரார்திக்கிறாள்.
3. த்வமர்யமாபவஸி ...  'அக்நி தேவனே ஸோம, கந்தர்வர்களுக்குப் பின் அக்நியாகி நீர்தான் இந்த பெண்ணை கடைசீயாக ரக்ஷித்து, ஒரு தந்தைபோல் (தாதா) இந்த வரனுக்கு அளித்துள்ளீர், இனி அவள் இந்த வரனின் குடும்பத்தில் வேரூன்றி இருவரும் ஒத்த மனதுடையவர்களாய் வாழ்க்கை நடத்திட தேவையான அனைத்துச் க்ஷேமங்களையும் அருள்வீராக".
ஒவ்வொரு முறையும் ஹோமம் செய்தவுடன் அக்நியைச் சுற்றி வரும்போது, அக்நிதேவனை துதித்து வேண்டுவது 'துப்யமக்ரே பர்யவஹந் ...." உம்மிடம் உள்ள சூர்யா என்ற சக்தியைக் கொண்டு, இவளுக்குப் பிறக்கும் ப்ரஜைகளை ரக்ஷித்தருளவேண்டும்.

No comments:

Post a Comment