24-06-2012 இன்றைய பகுதி:
பெண்ணிடம் உள்ள அவலக்ஷணங்களைத் தர்பத்தால் துடைத்து நீக்குவதற்கான மந்த்ரம்:
இதமஹம் :- ஏ பெண்ணே! உன்னிடம் என்னைக் கொல்லக்கூடிய அலக்ஷ;மீ எனப்படும் அமங்கலத்தன்மை இருந்தால் அதை இந்த மந்திரத்தை ப்ரயோகித்து இந்த தர்பத்தால் துடைத்து அதை உன்னைவிட்டு அகலும்படியாகச் செய்கிறேன் (என்று பெண்ணின் இரு புருவங்களுக்கு மத்தியில் தர்ப்பையின் நுனியால் துடைத்து மேற்குப்புறம் எரிகிறான்).
தங்களைப் பிரிந்து புக்ககம் செல்லும் பெண்ணின் பிரிவால் கண்ணீர்விடும் தாய் மற்ற பந்துக்களைப் பார்த்து ஆறுதலாகச் சொல்லப்படும் மந்த்ரம் :-
ஜீவாம்ருதந்தி :- இந்த திருமணம் என்னும் சுபகாரியத்தினால் பித்ருக்களும், தேவர்களும் த்ருப்தியடைந்து அநுக்ரஹமும், ஆசீர்வாதமும் செய்கிறார்கள். தம்பதிகளுக்கும் ஒருவரை ஒருவர் தழுவி மகிழும் ஆனந்தத்தையும், ஒருவருக்கொருவர் ஆதரவையும் அடைகிறார்கள். எனவே ஆனந்தமான இந்நேரத்தில் அபசகுனமாக அழுதல் கூடாது. கன்னிகையின் தாய் மற்றும் பந்துக்களே! 'இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருந்து எங்களை ஆசீர்வதிக்கின்றனர் என ஆண்டாள் அருளிச்செய்துள்ளதை எண்ணிப்பாருங்கள். இவளை நான் மணந்து கொள்வதால் இந்த்ராதி தேவர்கள் மற்றும் இரு குடும்பத்தின் பித்ருக்களுக்கும் ஆனந்தம் அடைந்துள்ளனர், எனவே இந்த சுபமான வேளையில் இவளின் பிரிவுக்காக வருந்துவதை விடுத்து எங்கள் Nக்ஷமத்துக்காக அனைவரும் ப்ரார்த்தனை செய்யுங்கள்.
மணப்பென்னை நன்னீராட்ட நால்திசைத் தீர்த்தங்களைக் கொண்டுவரும்படி பார்பனச் சிட்டர்களை ப்ரார்த்தித்தல்:
வ்யக்ஷத் க்ரூரம் :- இந்த ஜலத்தினால் இவளிடம் உள்ள கெடுதல் ஏற்படுத்தக்கூடிய தோஷங்கள் விலகட்டும். அப்படிப்பட்ட பரிசுத்தமான ஜலங்களை ப்ராஹ்மணர்கள் கொண்டு வரட்டும். இந்த ஸ்நாநத்தினால் இவள் ஸந்ததிகளை பாதிக்கக்கூடிய எந்த தோஷங்கள் இருந்தால் அனைத்தும் விலகட்டும். ஹே ப்ராம்மணோத்தமர்களே நீங்கள் நான்கு திசைகளிலும் சென்று கன்னிகையின் தோஷங்களை முற்றிலுமாக நீக்க வல்ல புனித தீர்த்தங்களை சேகரித்து வாருங்கள்.
பெண்ணின் தலையில் தர்பத்தால் செய்யப்பட்ட வளையத்தையும், அதன்மீத நுகத்தடியை வைத்து, அதன்மீது தங்கத்தை (திருமங்கல்யத்தை) வைத்து அதன்வழியாக தீர்த்தவிடும்போது சொல்லப்படும் மந்த்ரம்.
அர்யம்ண: :- இந்த தர்ப வளையம் சுற்றியிருப்பதுபோல், விவாஹ அக்னியைச்சுற்றி ஆதிதயன் முதலான தேவர்களும் அனைத்து பந்துக்களும் இவளைச் சுற்றியிருந்து இந்த விவாஹ பந்தத்தை கண்டு ஆசீர்வதிக்கட்டும். சூர்யனை க்ரணங்கள் சூழ்ந்திருப்பதுபோல் பந்துக்களும் நண்பர்களுமாகிய இந்த ஸபையில் உள்ளோர் அனைவரும் எங்களைச் சூழ்ந்திருந்து சூர்யாதி தேவர்களின் அநுக்ரஹத்திற்காக ப்ரார்த்திக்கும் இந்த வேளையில் என் கோரிக்கைகளை முழுமையாக அருளவேண்டும்படி தேவதைகளை நீங்களும் ப்ரார்த்தனை செய்யுங்கள்.
நுகத்தடி வைக்க மந்த்ரம்:
கேநஸ: கேரத: :- சசீ தேவியின் கணவனான இந்த்ர தேவனே! 'அபாலா" என்ற பெண்ணின் சரும நோயை, உம் தேரின் சக்கரம் - தேர் தட்டு - நுகத்தடி இவற்றிலுள்ள துவாரங்களின் வழியாக ஜலம் விட்டு அவளை நோயிலிருந்து விடுவித்து அழகுள்ள சரீரத்தை அடையும்படிச் செய்தாய். (அதுபோல் இந்தக் கன்னிகையின் சிரசில் வைக்கப்பட்டுள்ள நுகத்தடி துவாரத்தின் வழியாக சேர்க்கப்படும் புனித நீரால் இவளது தோஷங்களையும் போக்கியருளவேண்டும்.
ரிக் வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அபாலையின் கதை அல்லது வரலாறு:
தொழுநோய், சொரி, சிரங்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட அபாலை என்ற பெண்ணை எவரும் மணம்புரிய முன்வரவில்லை. அவள் மணம்புரிந்து கணவனுடன் ஸோமனை வழிபட ஆவலாய் இருந்தாள். இந்நிலையில் ஒரு தினம் அவள் ஒரு நதயின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள். அவ்வெள்ள நீரில் ஸோம தேவனுக்கு மிகவும் ப்ரியமான ஸோமரஸத்தைக் கொண்ட ஸோமலதை எனும் கொடி அவள் கையில் தற்செயலாகக் கிட்டியது. அவள் அதன் ரஸத்தை பல்லால் கடித்துப் பிழிந்து ஸோமனை த்யானித்து அவனுக்குச் ஸமர்ப்பித்தாள். இதனால் த்ருப்தியடைந்த இந்த்ரன், அவளை தன் தேர் சக்கரம், தேர்த்தட்டு, நுகத்தடி இவற்றின் வாயிலாக மந்திரிக்கப்பட்ட தீர்த்தத்தைச் செலுத்தி அவளை நல்ல அழகுள்ள ரூபவதியாக்கினான்.
நுகத்தடியில் ஸ்வர்ணத்தை (தற்போது திருமாங்கல்யம்) வைக்கும் மந்த்ரம்:
சந்தே ஹிரண்யம் :- ஏ பெண்ணே! மந்திர ஜலத்தின் ஸ்பரிசத்திற்காக உன் தலையில் வைக்கப்படும் இந்த ஸ்வர்ண மயமான தங்கமானது உனக்கு எல்லாவித நலன்களையும் அளிக்கட்டும். அபாலையை பரிசுத்தப்படுத்திய அதே மந்திரத்தால் நுகத்தடி வழியாக செலுத்தப்பட்டு, தங்கத்தில் தோய்ந்து உன் அங்கங்களை வந்தடையும் இந்த ப்ராஹ்மணர்களால் கொண்டுவரப்பட்ட பரிசுத்தமான புண்ணிய ஜலம் உன்னை ஸகலவிதமான தோஷங்களிலிருந்தும் விடுவித்து பரிசுத்மாக்கி என்னுடன் இரண்டறக் கலந்து எல்லா மங்கலங்களையும் அநுபவிப்போமாக.
பெண்ணை ப்ரோக்ஷpக்க ஐந்து மந்திரங்கள் :
1. ஹிரண்ய வர்ணா: :- ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று பெரிய பிராட்டியாரை வேதம் வர்ணிப்பதுபோல், திருமகளைப்போன்ற ஒளிபொருந்திய, தான் எப்போதும் சுத்தமானதும், அனைவரையும் சுத்தப்படுத்தி அனைத்துவித பாபங்கள் தோஷங்களிலிருந்தும் விடுவிக்க வல்லதுமான இந்த புண்ணிய தீர்த்தங்களால் ஸவிதா தேவன் உன்னை பரிசுத்தமாக்கட்டும்.
2. ஹிரண்யவர்ணா: :- இப்படிப்பட்ட தீர்த்தங்களால்தான் கச்யபன் எனும் சூரியன் உண்டானான். அக்நியும் இதிலிருந்துதான் தோன்றினார். எந்த தீர்த்தங்கள் தன்னுள் அக்னியை வைத்துள்ளதோ அந்த சுபமான தீர்த்தகங்கள் உனக்கு இம்மையிலும், மறுமையிலும் அனைத்து நலன்களையும் வழங்கட்டும். (அக்நின் கர்பம் ததிரே - என்று ஜலம் அக்னியைத் தன் கர்பத்தில் வைத்துள்ளது என வேதம் உத்கோஷிக்கிறது. இதன் பொருள் : ஜலம் என்பது இரண்டு ஹைட்ரஜன், மற்றும் ஒரு ஆக்ஸிஜன் ஆகிய வேதிப்பொருட்காளல் ஆனது என விஜ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். ஆக்ஸிஜன் இல்லாமல் அக்னி இல்லை).
3. யாஸாம் ராஜா :- தீர்த்தத்திற்கு அதிபதியான வருண தேவன் ஜல மத்தியில் இருந்து கொண்டு, ஜனங்களின் புண்ய பாபங்களை பரிபாலித்து வருகிறாரோ, அந்த வருணனின் அநுக்ரஹத்தால் உனக்கு நன்மைகள் ஏற்படட்டும்.
4. யாஸாம் தேவா: :- எந்த தீர்த்தத்தை தேவர்களும் ஆஹாரமாக ஏற்கிரார்களோ, எந்த தீர்த்தங்கள் ஆகாயத்தில் மேக ரூபமாய்த் தவழ்கின்றனவோ, அந்த புண்ணிய ஜலங்களால் உனக்கு எல்லா சுகங்களும் கிட்டட்டும்.
5. சிவேநத்வா :- ஏ பெண்ணே இந்த ஜலங்கள் உன்னை மங்கலகரமான சுபபார்வையை உன்மேல் செலுத்தட்டும். பரிசுத்தமான புண்ணியகரமான தன் தேஹங்களால் உன் தேஹத்தை நனைக்கட்டும். நெய் தாரையாய் விழுவதுபோல் உன்மேல் விழும் இந்த தீர்த்தங்கள் உனக்கு எல்ல அநுக்ரஹஙகளையும் செய்யட்டும். ஏ வதுவே மிகவும் மஹிமையுள்ள மங்களகரமான புனிதமான இந்த தீர்த்தங்கள் என் ப்ரார்தனைக்காக இங்கு சூழ்ந்துள்ள தேவதைகள் மற்றும் பெரியோர்களின் அருளாசியுடன் உன் சரீரத்தைச் சேர்தவுடன் நீ இனி இம்மியளவும் தோஷங்களற்றவளாய் மிகவும் புனிதமானவளாய் பரிசுத்தையாய் ஆக்கப்பட்டுவிட்டாய் இனி அனைத்தும் உனக்கு மங்களங்களேயாகும்.
No comments:
Post a Comment