புரட்டாசி மாத விரதங்கள்..
This thread is located at
http://www.brahminsnet.com/forums/showthread.php/8378-புரட்டாசி-மாத-விரதங்கள்
Here is the message that has just been posted:
***************
"
புரட்டாசி மாத பண்டிகைகள்.
மஹாளய பக்ஷம்:--09-09-2014 முதல் 24-09-2014 முடிய
நமது வாழ்க்கை உயர்வதற்கு உதவி செய்துள்ள நமது. பெற்றோர், தாத்தா, பாட்டி, அத்தை,, குரு, ஆசிரியர் முதலானோருக்கு நாம் நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பே மஹாளய பக்ஷ காலமாகும்..
மஹாளயம் என்றால் மஹான்களின் இருப்பிடம் . . இறந்து போனாலும் கூட நமது பித்ருக்கள் இந்த சமயத்தில் வருடந்தோறும் நமது வீடு தேடி வருகிறார்கள். இவர்களுக்கு நாம் அன்ன மளிக்க வேண்டும்.
மஹாளயத்தை நாம் பார்வணம், ஹிரண்யம், தர்ப்பணம் ஆகிய மூன்று வழிகளில் செய்யலாம். பார்வணம் என்பது ஆறு ப்ராஹ்மணர்களை பித்ருக்களாக வரித்து ஹோமம் செய்து ப்ராஹ்மணர்களுக்கு சாப்பாடு போடுவது. ,
ஹிரண்யம் என்பது பச்சரிசி, வாழைக்காய், தக்ஷிணை கொடுத்து
தர்பணம் செய்வது.
தர்பணம் என்பது தானாகவே அமாவாசை தர்பணம் செய்வது போல் மஹாளய பக்ஷம் 16 நாட்களும் தினமும் தர்பணம் செய்வது. இவற்றில் ஏதாவது ஒன்று செய்து பித்ருக்களை த்ருப்தி செய்வது நமது கடமை ஆகும்.
ஏதாவது ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள் மஹா பரணி(13-9-14
மத்யாஷ்டமி (16-9-14) மஹா வ்யதீபாதம் (17-9-14) கஜசாயை (21-9-14) . தகப்பனாரின் திதி ஆகிய நாட்களில் செய்யலாம். .இவை மிகவும் சிறந்த நாட்கள் ஆகும்.
மற்ற நாட்களில் செய்வதாக இருந்தால் கர்த்தா, கர்த்தாவின் மனைவி, மூத்த குமாரன் பிறந்த நக்ஷத்திரம் ... ப்ரதமை, சஷ்டி, ஏகாதசி, வெள்ளிக்கிழமை, , வ்யதீபாத ஸம்பந்தமில்லத ரோஹிணி, ரேவதி, , த்ரயோதசி ஸம்பந்தமில்லாத மகம், இல்லாத நாட்கள் பார்த்து செய்ய வேண்டும். ஆதாரம் நிர்ணய ஸிந்து.,
ஸன்யாஸியாக ஸித்தி ஆனவர்களுக்கு 20-9-14 அன்று தான் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கும் இன்று செய்யலாம்.
ஆக்ஸிடென்ட் முதலியவைகளால் துர் மரணமடைந்த வர்களுக்கு (இயற்கையாக மரண மாகாதவர்களுக்கு மட்டும்) 22-9-14 அன்று செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு இன்று செய்யக்கூடாது.
23-9-14 அமாவாசை அன்று ப்ருஹ்மசாரி ஒரு நாள் செய்யும் மஹாளயம் செய்யலாம். கணவனுக்கு மனைவி செய்யும் மஹாளயம் செய்யலாம்.
மற்ற யாரும் 22-9 மற்றும் 23-9-14 இரு தினங்களும் ஒரு நாள் செய்யும் மஹாளயம் செய்யக்கூடாது.
மஹாளய பக்ஷத்தில் தாய் தந்தைக்கு ( வருடா வருடம் செய்யும் சிராத்தம் வந்தால் )முதலில் சிராத்தம் செய்துவிட்டு அதன் பிறகு மஹாளய பக்ஷத்திற்குள் மற்றொரு நாளில் நாள் பார்த்து மஹாளயம் செய்ய வேண்டும்.
17-9-2014 அவிதவா நவமி சுமங்கலி ப்ரார்த்தனை இன்று செய்யலாம்.
நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல முறையில் வளர்க்கப்பட்டு நல்ல கணவரை அடைந்து கணவரின் கோபதாபங்களையும் குழந்தைகளின் கஷ்ட நஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு குடும்பத்தை தூணாக நின்று கப்பாற்றி
, அனைவரையும் ஒன்றினைத்து , முக்கியமாக நமது கலாசாரத்தையும் , வைதீக தர்மங்களையும் , ஸம்ப்ரதாயங்களையும் கடைபிடித்து வாழும் பெண்மணியே பதிவ்ரதை என்று அழைக்கப்படுகிறாள்.
இப்படிப்பட்ட பெண்களுக்கு கிடைக்கும் ஒரு பாக்கியம் தான் தனது கணவனுக்கு முன்னால் பூவும் பொட்டுமாக பரம பதம் அடைவது.. இவ்வாறு ஒரு குடும்பத்தில் ஸுமங்கலியாக இறந்திருந்தால் அந்த பெண்ணுக்கு சிராத்ததிற்கு மறு நாள் ஒவ்வொரு வருடமும் கட்டாயம் ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்ய பட வேண்டும்.
இந்த ஸுமங்கலி ப்ரார்த்தனை சிராதத்திற்கு சமமானது.
இது போலவே பெண்களை குறித்து மஹாளய பக்ஷத்திலும் ஒரு நாள்
ஸுமங்கலியாக இறந்தவர்களுக்காக வஸ்த்ரம் கொடுத்து சாப்பாடு போட்டு அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.
இந்த நாள் தான் அவிதவா நவமி எனப்படுகிறது.
""பர்துரக்ரே ம்ருதா நாரி ஸஹ தாஹேந வா ம்ருதா தஸ்யா: ஸ்தானே நியுஞ்சீத விப்ரைஸ் ஸஹ ஸுவாஸினீம் ( தர்ம ஸிந்து-73 ).
தனது கணவருக்கு முன்போ அல்லது தனது கணவருடன் சேர்ந்தோ இறந்து போன ஸுமங்கலிகளின் த்ருப்திக்காக ஸுவாஸினி பெண்களை வீட்டிற்கு வரவழைத்து வஸ்த்ரம் தந்து சாப்பாடு போட்டு ஆசீர்வாதம் பெற வேன்டும் என்கிறது தர்ம ஸிந்து.
கணவனை இழந்த பெண் விதவா. ஸுமங்கலி பெண் அவிதவா எனப்படுகிறாள்.. மஹாளய பக்ஷத்தில் அ விதவா நவமி அன்று சுமங்கலி ப்ரார்த்தனை செய்யலாம்..
25-9-2014. தெளஹித்ரப்ரதிபத்:--
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் ப்ரதமை அன்று தனது தாயாரின் பெற்றோர்களுக்கு சாப்பாடு, வஸ்த்ரம், பரிசு, ஆபரணங்கள் வாங்கி தர வேண்டும். . தனது தாயாரின் பெற்றோர் விரும்பும் இடத்திற்கு க்ஷேத்ராடனம் அழைத்து செல்ல வேண்டும்..
25-9-14 முதல் 3-10-14 முடிய நவராத்திரி
8-10-14 சந்திர கிரஹணம்.சந்திரன் உதய நேரம் 5-53 பி. எம். மோக்ஷம் 6-04 பி. எம். . 11 நிமிடங்களே புண்ய காலம். மோக்ஷ ஸ்நானம் செய்து போஜனம் செய்யலாம் ...பகல் போஜனம் வேண்டாம்.
***************