Saturday, 19 July 2014

28-08-2014. ஹரிதாளிகா விருதம்.

ஹரிதாளிகா வ்ருதம்..

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8226-ஹரிதாளிகா-வ்ருதம்

Here is the message that has just been posted:
***************
28-08-2014. ஹரிதாளிகா விருதம்.

பாத்ரபத மாத சுக்ல பக்ஷ த்ருதியை  அன்று தேவியை பூஜித்து செய்ய வேண்டிய விருதம் இது. திருமணம் நடைபெற வேண்டிய கன்னி பெண்கள்  இன்று மாலையில் தனது வீட்டில் வ்ருஷபத்தின் மீது பார்வதியுடன்

அமர்ந்திருக்கும் சிவன் படத்தை வைத்து கெளரீ ஸஹித மஹேஸ்வராய நம: என்று சொல்லி பூஜை அஷ்டோத்ர அர்ச்சனை செய்து பதினாறு தட்டுகளில்  வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழங்கள் தேங்காய்

வைத்து நிவேதனம் செய்து தெரிந்த ஸ்தோத்ரங்கள் சொல்லி ப்ரார்தித்து  ""மயாபி யேந காமேந பூஜிதாஸி மஹேஸ்வரி ராஜ்யம் தேஹி ச ஸெளபாக்கியம் ப்ரஸன்னாப வ பார்வதி"" (ஸ்மிருதி கெளஸ்துபம்—208)

என்னும் ஸ்லோகம் சொல்லி ப்ரார்திக்கவும். .பிறகு இந்த 16 தட்டுகளையும் எட்டு தம்பதிகளுக்கு கொடுத்து நமஸ்கரித்து ஆசி பெறவும்.. இவ்வாறு

செய்வதால் பெண்கள் சாஸ்திர ஸம்மத முறையில் தாங்கள் விரும்பும் நபருடன் திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக வாழ முடியும் என்கிறது சாஸ்திரம்..

ஹிமவான் தன் பெண்ணான பார்வதியை சிவனல்லாத ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுக்க தீர்மானித்தார். . பார்வதியின் தோழிகள் பார்வதியை வேறு ஒரு நதி கரைக்கு அழைத்து சென்று இந்த விரதம் செய்ய

சொன்னார்கள். . இதன் பயனாக பரமசிவன் நேரில் வந்து ஹிமவானின் ஸம்மதத்துடன்  பார்வதியை ஏற்று கொண்டதாகவும் பவிஷ்யோத்திர புராணம் கூறுகிறது. .

 ஆகவே தான் "ஆலிபி; ஹாரிதா யஸ்மாத் தஸ்மாத் ஸா ஹரி தாளிகா " என்பதாக ஆலி எனப்படும் தோழிகளால் அபகரித்து செல்லப்பட்டதால் இந்த விருதத்திற்கு ஹரிதாளிகா விருதம் எனப்பெயர் ஏற்பட்டது.
***************

No comments:

Post a Comment