சயன ஏகாதசி.
This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/7618-சயன-ஏகாதசி
Here is the message that has just been posted:
***************
ஏகாதச்யாம் சுக்லாயாம் ஆஷாடே பகவான் ஹரி; புஜங்க சயனே சேதே க்ஷீரார்ண ஜலே ஸதா; நித்ராம் த்யஜதி கார்திக்யாம் தயோ: ஸம்பூஜயேத் ஸதா ப்ருஹ்மஹத்யாதி கம் பாபம் க்ஷிப்ரமேவ வ்யபோஹதி.
ஒரு வருஷத்து 25 ஏகாதசிகளில் 1. ஶ்ரீ மஹா விஷ்ணு சயனிக்கும் (படுக்கும்) ஆஷாட சயன ஏகாதசி.; 2. ஶ்ரீ மஹா விஷ்ணு படுக்கையில் திரும்பி படுக்கும் பரிவர்த்தன ஏகாதசி. 3. ஶ்ரீ மஹா விஷ்ணு படுக்கையிலிருந்து
எழுந்து கொள்ளும் உத்தான ஏகாதசி ஆகிய மூன்று ஏகாதசிகளும் மிக முக்யமானவை. .இந்த மூன்று ஏகாதசிகளிலும் உபவாசமிருந்து ஶ்ரீ மஹா விஷ்ணுவை பூஜிப்பதால் எல்லா ஏகாதசிகளிலும் உபவாசம் இருந்த பலன் கிட்டும்
நாம் அறியாமல் செய்த ப்ருஹ்மஹத்தி போன்ற பாபங்களும் அகலும். ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரும் ஆஷாட சயன ஏகாதசியன்று பகலில் தம்பதிகளாக ( கணவன் மனைவி ) எதுவும் சாப்பிடாமல்
( சக்தி அற்றவர்கள் பால் பழம் சாப்பிடலாம்) உபவாசமிருந்து , மாலையில் சூர்ய அஸ்தமனமான பின்பு , அழகான பஞ்சாலான (பட்டு) மெத்தையில் ஶ்ரீ மஹாலக்ஷ்மியுடன் கூடிய மஹா விஷ்ணுவின் படம்
வைத்து அல்லது விக்கிரஹம் வைத்து , மல்லிகை, தாமரை பூக்களால் மஹா விஷ்ணூ மஹா லக்*ஷ்மி அஷ்டோத்ரம் சொல்லி அர்ச்சித்து பால் சாதம் நிவேதனம் செய்து நமஸ்கரித்து
விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்து இரவில் கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ஶ்ரீ மஹா விஷ்ணுவையும் ஶ்ரீ மஹா லக்ஷ்மியையும் ப்ரார்த்தித்துக் கொள்ளவும்.
வாஸுதேவ ஜகத்யோநே ப்ராப்தேயம் த்வாதசீ தவ புஜங்க சயநே (அ)ப்தெள
ச ஸுகம் ஸ்வபிஹி மாதவ. இயம் து த்வாதசீ தேவ சயனார்த்தம்
விநிர்மிதா அஸ்யாம் ஸுப்தே ஜகன்னாதே ஜகத்ஸுப்தம் பவே திதம்
விபுத்தே த்வயீ புத்யேத ஸர்வமேதச் சராசரம்..
ஹே வாஸுதேவ , உலகமனைத்தும் தோன்றுவதற்கு காரணமானவரே இந்த த்வாதசியில் பாற்கடலில் பாம்பின் மேல் ஸுகமாக தூங்குங்கள்.
தூங்கு வதற்காகவே இந்த த்வாதசீ ஏற்பட்டுள்ளது. இன்று ஜகன்னாதரான
தாங்கள் உறங்குவதால் சகல உலகமும் உறங்கும். தாங்கள் விழித்தால் அனைத்து சராசரங்களும் விழித்துக்கொள்ளும்.. என்று சொல்லி ஶ்ரீ மஹா விஷ்ணு மேல் பக்தியுடன் புஷ்பங்கள் போட்டு ப்ரார்தித்துக் கொள்ளலாம்..
இவ்வாறு செய்வதால் படுக்க நல்ல வீடும் நல்ல படுக்கையும் படுத்தால் நல்ல ஆழ்ந்த தூக்கமும் ஸுகமான வாழ்க்கையும் அமையும்.
***************
This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/7618-சயன-ஏகாதசி
Here is the message that has just been posted:
***************
8-7-14. சயன ஏகாதசி;ஏகாதச்யாம் சுக்லாயாம் ஆஷாடே பகவான் ஹரி; புஜங்க சயனே சேதே க்ஷீரார்ண ஜலே ஸதா; நித்ராம் த்யஜதி கார்திக்யாம் தயோ: ஸம்பூஜயேத் ஸதா ப்ருஹ்மஹத்யாதி கம் பாபம் க்ஷிப்ரமேவ வ்யபோஹதி.
ஒரு வருஷத்து 25 ஏகாதசிகளில் 1. ஶ்ரீ மஹா விஷ்ணு சயனிக்கும் (படுக்கும்) ஆஷாட சயன ஏகாதசி.; 2. ஶ்ரீ மஹா விஷ்ணு படுக்கையில் திரும்பி படுக்கும் பரிவர்த்தன ஏகாதசி. 3. ஶ்ரீ மஹா விஷ்ணு படுக்கையிலிருந்து
எழுந்து கொள்ளும் உத்தான ஏகாதசி ஆகிய மூன்று ஏகாதசிகளும் மிக முக்யமானவை. .இந்த மூன்று ஏகாதசிகளிலும் உபவாசமிருந்து ஶ்ரீ மஹா விஷ்ணுவை பூஜிப்பதால் எல்லா ஏகாதசிகளிலும் உபவாசம் இருந்த பலன் கிட்டும்
நாம் அறியாமல் செய்த ப்ருஹ்மஹத்தி போன்ற பாபங்களும் அகலும். ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரும் ஆஷாட சயன ஏகாதசியன்று பகலில் தம்பதிகளாக ( கணவன் மனைவி ) எதுவும் சாப்பிடாமல்
( சக்தி அற்றவர்கள் பால் பழம் சாப்பிடலாம்) உபவாசமிருந்து , மாலையில் சூர்ய அஸ்தமனமான பின்பு , அழகான பஞ்சாலான (பட்டு) மெத்தையில் ஶ்ரீ மஹாலக்ஷ்மியுடன் கூடிய மஹா விஷ்ணுவின் படம்
வைத்து அல்லது விக்கிரஹம் வைத்து , மல்லிகை, தாமரை பூக்களால் மஹா விஷ்ணூ மஹா லக்*ஷ்மி அஷ்டோத்ரம் சொல்லி அர்ச்சித்து பால் சாதம் நிவேதனம் செய்து நமஸ்கரித்து
விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்து இரவில் கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ஶ்ரீ மஹா விஷ்ணுவையும் ஶ்ரீ மஹா லக்ஷ்மியையும் ப்ரார்த்தித்துக் கொள்ளவும்.
வாஸுதேவ ஜகத்யோநே ப்ராப்தேயம் த்வாதசீ தவ புஜங்க சயநே (அ)ப்தெள
ச ஸுகம் ஸ்வபிஹி மாதவ. இயம் து த்வாதசீ தேவ சயனார்த்தம்
விநிர்மிதா அஸ்யாம் ஸுப்தே ஜகன்னாதே ஜகத்ஸுப்தம் பவே திதம்
விபுத்தே த்வயீ புத்யேத ஸர்வமேதச் சராசரம்..
ஹே வாஸுதேவ , உலகமனைத்தும் தோன்றுவதற்கு காரணமானவரே இந்த த்வாதசியில் பாற்கடலில் பாம்பின் மேல் ஸுகமாக தூங்குங்கள்.
தூங்கு வதற்காகவே இந்த த்வாதசீ ஏற்பட்டுள்ளது. இன்று ஜகன்னாதரான
தாங்கள் உறங்குவதால் சகல உலகமும் உறங்கும். தாங்கள் விழித்தால் அனைத்து சராசரங்களும் விழித்துக்கொள்ளும்.. என்று சொல்லி ஶ்ரீ மஹா விஷ்ணு மேல் பக்தியுடன் புஷ்பங்கள் போட்டு ப்ரார்தித்துக் கொள்ளலாம்..
இவ்வாறு செய்வதால் படுக்க நல்ல வீடும் நல்ல படுக்கையும் படுத்தால் நல்ல ஆழ்ந்த தூக்கமும் ஸுகமான வாழ்க்கையும் அமையும்.
***************
No comments:
Post a Comment