Saturday 30 June 2012

16 விவாஹ ஹோம மந்த்ரங்கள்

4ம் கண்டம்
16 விவாஹ ஹோம மந்த்ரங்கள்
1, 2, 3, 4 : ஸோமாய :- இந்த கந்யகையை முதலில் அடைந்த ஸோமதேவனுக்கு இந்த ஹோமம் செய்கிறேன். இரண்டாவதாக கந்தர்வனுக்கும், மூன்றாவதாக அக்நிக்கும் ஹோமம் செய்கிறேன். (இந்த மூவரும்தான் இவளைக் காப்பாற்றி இந்த வரனுக்குக் கொடுத்துள்ளார்கள்). 
4. கந்யலா :- இவள் பிறந்த வீட்டை விட்டு கணவனின் இல்லத்தை அடைவதால் இவன் தன் கந்யை என்ற தீiக்ஷ அதாவது நியமத்திலிருந்து நீங்கிவிட்டாள். 
5. ப்ரேதோமுஞ்சாதி :- இஷ்டங்களை பூர்த்தி செய்து வைக்கும் ஓ இந்த்ர தேவனே! இவளுக்கு அவள் பித்ரு க்ருஹத்திலுள்ள அபிமானங்களை (பற்றுதலை) விடுவிக்கவேண்டும். கணவனாகிய என்னுடைய குலத்தில் பற்றுதல் மிகவேண்டும் (பற்றுதல் இல்லாமல் போய்விடக் கூடாது). இவளுக்கு நல்ல புத்திரர்களும், நல்ல ஸம்பத்துக்களும் வழங்கி இவளை இந்த புக்ககத்தில் மனம் லயித்துப்போகும்படியாகச் செய்வீராக.
6. இமாந்த்வம் :- வேண்டியவர்களின் அனைத்து வேண்டுதலையும் மழை போல் பொழிந்து நிறைவேற்றும் இந்த்ரனே! இவளுக்கு நிறை பிள்ளைச் செல்வங்களை ஆசீர்வதியும். பத்து குழந்தைகளை இவள் பெற்றாலும் 11வதாக (கடைசியாக)ப் பெற்ற குழந்தையிடத்தில் அன்பு செலுத்துவதுபோல் என்னிடம் எப்பொழுதும் இவள் அன்பு செலுத்தவேண்டும்.
7. அக்நிரைது :- ஓ அக்நி மற்றும் வருண தேவர்களே! இந்த பெண்ணிடம் பிறக்கவுள்ள புத்திரர்களுக்கு அபம்ருத்யு எனும் அகால மரணம், துர்மரணம் எதுவும் நேரிட்டுவிடாமல், இவள் எக்காரணம் கொண்டும் புத்ர சோகத்தினால் இவள் கண்ணீர்விட்டு அழும்படியான நிலை இவளுக்கு ஏற்படாமலிருக்க ஆசீர்வதிப்பீர்களாக.
8. இமாம் அக்நி: :- விவாஹ அக்னி இவளை ரக்ஷிக்கட்டும். இவளிடம் பிறக்கும் பிள்ளைகள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்காளக இருக்கட்டும். இவள் மடியில் எப்பொழுதும் ஒரு குழந்தை தவழந்த வண்ணம் இருந்து - அவள் மடியை ஒருபோதும் வெறுமையாக்காமல் இருக்கட்டும். நீண்ட ஆயுளை உடைய அந்தக் குழந்தைகளை தினமும் காலை உறங்கி எழுந்தும் கொஞ்சி உறவாடும்படியான பாக்யத்தைக் கொடும்.
9. மாதே க்ருஹே :- ஹே கல்யாணி! உன் வீட்டில் நள்ளிரவில் அழுகுரல் கேட்கவேண்டாம். அழச் செய்யும் அனைத்து துர்தேவதைகளும் உன்னிடமிருந்து விலகி வேறிடத்திற்குச் செல்லட்டும். தலைவிரி கோலமாய் மார்பிலடித்துக்கொண்டு அழவேண்டிய நிலை உனக்கு எப்போதும் வரவேண்டாம். உன் கணவன், குழந்தைகள் நீண்ட ஆயுளுள்ளவர்களாகவும் அவர்களுடன் காலமெல்லாம் சந்தோஷமாக இருப்பாயாக.
10. த்யௌஸ்தே ப்ருஷ்டம் :- உன் ப்ருஷ்டத்தை (முதுகு, ஆஸனம் ஆகிய பின் பகுதிகள்) ஆகாசம் ரக்ஷிக்கட்டும். உன் இரு துடைகளையும் வாயு ரக்ஷிக்கட்டும். அச்விநீ தேவர்கள் உன் ஸ்தனங்களை (மார்பகங்களை) ரக்ஷிக்கட்டும். உன் குழந்தையை ஸவிதா எனும் சூரிய தேவன் காப்பாற்றட்டும். பிறந்த குழந்தை துணி உடுத்தும் காலம் வரும் வரை ப்ருஹஸபதி தேவன், அச்விநீ தேவர்களும் காப்பாற்றட்டு;ம். 
11. அப்ரஜஸ்தாம் :- உன்னிடம் குழந்தை பெறமுடியாத மலட்டுத்தன்மை இருந்தாலும், உனக்கு பிறந்த குழந்தைக்கு கேடுவிளைவிக்கும் புத்ர தோஷம் இருந்தாலும் மற்ற எந்த பாபகரமான தோஷங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் வாடிய பூவை தலையிலிருந்து எடுத்து எறிவதுபோல் உன் சத்ருக்களாகிய பகைவர்களிடம் எறிகிறேன்.
12. இமம்மே வருண, 13. தத்வாயாமி, 14. தவன்னோ அக்நே, 15. ஸத்வந்நோ அக்நே, 16. துவமக்நே அயாஸி ஆகிய மந்த்ரங்களுக்கான விளக்ககங்கள் உபநயனத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. 
12, 13. இமம்மே வருண, தத்வாயாமி... 'வருண தேவனை ஸ்துதி செய்கிறேன், இதுவரை நான் ப்ரார்தித்த அனைத்தும் விரைவில் நிறைவேற அருள்புரியும் என்று, வருணன் குற்றங்களைப் பொறுத்து, கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றை அவற்றை அனுபவிக்க தீர்காயுளையும் கொடுப்பாராக.
14. த்வந்நோ, 15.ஸத்வந்நோ அக்நே, 16. த்வமக்நே .... 'அக்நிதேவன் மற்ற தேவர்களுக்கு வழங்கப்படும் ஹவிஸ்ஸை சுமந்து செல்பவர், அதனால் அந்த அக்நிதேவன் வருண தேவனை நிர்பந்தித்து என் கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்யவேண்டும். மேலும் அக்நி பகவாந் எப்போதும் நாங்கள் அளிக்கும் ஹவிசுகளைப் ஏற்றுக்கொண்டு எங்களுக்கு நல்லாசிகள் வழங்கிக்கொண்டிருக்கவேண்டும்.
5ம் கண்டம்
வது பாராங்கல் - அம்மியை மிதிக்கும் 'ஆதிஷ்டேமம்" மந்த்ரத்திற்கு உபநயனத்தில் அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
அஸ்மாரோஹணம்
ஆதிஷ்டேமம் அஸ்மாநம் அஸ்மேவத்வம் ஸ்திராபவ. அபிதிஷ்ட ப்ரதந்யத: ஸஹஸ்வ ப்ரதநாயத:.
'ஹே வதுவே நீ இந்த பாரங்கல்லின் மேல் ஏறி நில். இதனால் அதன் உறுதித்தன்மை உனக்குப் புலனாகும்.  நீ உறுதியிலும், பொறுமையிலும் இந்த கல்லைப்போல் இருருந்து, உன்னை எதிர்ப்பவர்களிடத்தும், உன் நற்பண்புகளை குலைத்துக் கெடுவழியில் இட்டுச்செல்பவர்களிடத்தும், குடும்பத்துக்கு கேடுவிளைவிக்கும் சத்ருக்களிடத்தும் உறுதி, பொறுமை காத்து வெல்வாயாக. நம்மிருவரிடையே இந்த திருமண  பந்தத்தால் ஏற்பட்ட நல்ல நட்பிலும் இந்த உறுதித்தன்மையை காத்துவருவாயாக. 

லாஜஹோம் (பொறி இடுதல்)
இந்தப் பொறி இடுதல் என்னும் வழக்கம், அக்கினியின் முன்னால் தம்பதிகள் உட்கார்ந்திருக்க, பெண்ணின் சகோதரன் நெற்பொறியை எடுத்து இரண்டு தடவை பெண்ணின் இரு கைகளிலும் போட வேண்டும்.  இரு கைகளிலும் ஏந்தி வாங்கிக் கொண்ட அந்தப் பொறியை, மணமகன் மனமகளின் கையைப் பிடித்து அக்கினியில் சேர்ப்பிக்க வேண்டும்.  இந்த லாஜஹோமம் என்பது சூரியனை உத்தேசித்துச் செய்யப்படுவதாகும்.  சூரியன் உலகத்தில் முதற் பிரகாசமான கடவுளாகக் கீர்த்தியோடு பிரகாசிப்பதைப் போன்று தன் கணவனும் சகல கீர்த்திகளோடு பிரகாசிக்க வேண்டுமென்ற பெண்ணின் பிரார்த்தனையும், சூரியனோடு இணை பிரியாதிருக்கும் சாயாதேவி போன்று தாமும் ஒற்றுமையாகப் பிரியாது எந்தக் காரியத்தையும் நிறைவேற்ற வேண்டுமென்ற வரனின் ஸங்கல்பமுமாக இந்த ஹோமத்தின் தத்துவம் கூறப்படுகிறது. 

மூன்று ஹோமம்.
1. இயம் நாரி ... பொரியினால் ஹோமம் செய்யும் இந்து வது தன் கணவன் நூறு வருடங்கள் ஜீவித்திருக்கும்படி அக்னிதேவனை வேண்டிக்கொள்கிறாள்.
2. அர்யமணம் நுதேவம் ... அர்யம தேவனை பொரியினால் பெண்கள் யாகம் செய்து பயனடைந்துள்ளனர். அதுபோல் இந்த வது அர்யம தேவனுக்கு இந்த பொரிஹோமத்தைக் காணிக்கையாக்கி பித்ருகுலத்திலிருந்து பதிகுலத்திற்கு வந்துள்ள என்னால் இந்தகுலத்திற்கு எல்லா நன்மைகளும் ஏற்படவேண்டும் என ப்ரார்திக்கிறாள்.
3. த்வமர்யமாபவஸி ...  'அக்நி தேவனே ஸோம, கந்தர்வர்களுக்குப் பின் அக்நியாகிய நீர்தான் இந்த பெண்ணை கடைசீயாக ரக்ஷித்து, ஒரு தந்தைபோல் (தாதா) இந்த வரனுக்கு அளித்துள்ளீர். அதவாது இந்தக் கன்னிகையை நீர்தான் இவனுக்கு தானமாகக் கொடுத்துள்ளீர். ஏனெனில் அவர்களது இஹபர அனைத்து நலன்களையும் நீரே நிர்வகிக்கிறீர். நட்ட செடிக்கு நீர்வார்த்து வளர்த்தவருக்கு, பிற்காலத்தில் அவை காய், கனிகளை தருவதுபோல் இவர்கள், பசுவின் பால், நெய் போன்றவற்றால் உம்மை ததித்துத் த்ருப்தி செய்கின்றனர். இனி இவள் இந்த வரனின் குடும்பத்தில் வேரூன்றி இருவரும் ஒத்த மனதுடையவர்களாய்  வாழ்க்கை நடத்திட தேவையான அனைத்துச் க்ஷேமங்களையும் அருள்வீராக".

ஒவ்வொரு முறையும் ஹோமம் செய்தவுடன் அக்நியைச் சுற்றி வரும்போது, அக்நிதேவனை துதித்து வேண்டுவது 'துப்யமக்ரே பர்யவஹந் ...." ஹே அக்நி தேவனே! கல்யாணப் பெண்களுக்கு அபிமானி தேவதையான ஸூர்யனின் புத்ரியான ஸூர்யாவை நீர் மணந்திருப்பதால் உலகிலுள்ள அனைத்து கல்யாணப் பெண்களுமே உம்முடைய அநுக்ரஹத்திற்குப் பாத்திரப்பட்டவர்களே! ஆகையால் இந்தக் கன்னிகையை ஸந்ததி அபிவ்ருத்திக்கு ப்ரதிபந்தகமான அதாவது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தோஷமில்லாத பெண்ணாக ஆசீர்வதித்து அநுக்ரஹிப்பீராக.
புந: பத்நீ: :- இவள் நீண்ட ஆயுளை உடையவளாகவும், அழகுள்ளவளாகவும் விளங்கும்படி அநுக்ரஹிக்கவேண்டும். இவளது கணவனாகிய என்னையும் நூறாண்டு வாழ ஆசீர்வதிப்பீராக.
விச்வாத த்வயாவயம் :- ஜலம் ஓடும் கால்வாயை ஆடு மாடுகள் சுலபமாகத் தாண்டுவதுபோல் எங்கள் பகைவர்களால் ஏற்படுத்தப்படும் அனைத்துத் தடைகளையும் உம் அருளால் நாங்கள் சுலபமாக தாண்ட அருள்புரியவேண்டும்.

பெண்ணின் இடுப்பில் கட்டப்பட்ட தர்பக் கயிற்றை அவிழ்க்க மந்த்ரம்:
ப்ரத்வாமுஞ்ஜாமி :- ஹே வதுவே! சற்று முன் ஸவிதா தேவன் உன்னை வருண பாசத்தால் கட்டினார். அதை நான் அவிழ்த்துவிடுகிறேன். நாமிருவரும் பல ஸத்கர்மாக்களை அநுஷ்டித்து ப்ரஹ்மலோகம் அடைவோம். 
இமம் விஷ்யாமி :- நல்லெண்ணத்துடன் ஸவிதா தேவன் உன்னைக் கட்டிய யோக்த்ரம் எனும் தர்பக் கயிற்றை நீக்குகிறேன். என்னோடு உன்னையும் ப்ரஹ்மலோகத்தில் (ப்ரஹ்மானந்தக் கடலில்) ஸுகமாக இருக்கச் செய்கிறேன்.
ஒவ்வொரு ஹோமத்தின் முடிவிலும், அந்த ஹோமத்தில் ஏற்பட்ட பிழைகளைப் பொருத்தருளும்படியும், ஹோமத்தால் கிடைத்த நன்மைகளுக்கு காரணமான அக்நி பகவானை போற்றி நமஸ்கரிக்கும் மந்த்ரம்:
அக்நே நய :- அக்நி பகவானே! செல்வம் மற்றும் நற்கதி அடைதலுக்காக எங்களால் செய்யப்படும் வேள்விகளின் பொருட்களை உரிய தேவதைகளிடத்தில் கொண்டு சேர்த்து எங்களின் மேன்மைக்குக் காரணமாக விளங்கி நல்வழியில் கொண்டு செல்பவரே! நீர் அனைத்து வழிகளையும் அறிந்தவர். மேலும் மேலும் எங்களை நல்வழியிலேயே செலுத்தும். யாம் பெறும் அனைத்து பாக்கியங்களுக்கும் காரணமாக விளங்கும் உமக்கு ப்ரதி உபகாரமாக எம்மிடம் உள்ள எதை அளித்து உம்மை கௌரவிக்க இயலும்?! எனவே எம்மிடம் உள்ளதிலேயே மிகச் சிறந்ததானது 'நம:" என்று சொல்லி உம்மை நமஸ்கரித்தல்தான். ஆகையால் நீர் எம்முடைய நமஸ்காரத்தை மனமுவந்து ஏற்று, எம் குற்றங் குறைகளைப் பொறுத்து, எம்மை ஆசீர்வதிக்கவேண்டும்.

அடுத்து மணமகன் மணமகளை தன் இல்லததிற்கு அழைத்துச் செல்லும் வழியில் சொல்லப்படவேண்டிய மந்த்ர ஜபத்திற்காக பொருள்:

Wednesday 27 June 2012

விவாஹ ஹோமம், அம்மி மிதித்தல், பொரி ஹோமம் - மந்த்ரங்களுக்கு அர்த்தம்

Sri:
அம்மி மிதித்தல், பொரியிடல் (பொரி ஹோமம்) வரையிலான மந்த்ரங்களுக்கு அர்த்தம் கொடுத்துள்ளேன்

16 விவாஹ ஹோம மந்த்ரங்கள்
1. ஸோமாய ஜநிவிதே .... 'பெண்ணுக்கு சோபை அளித்த ஸோமனுக்கு"
2. கந்தர்வாய ... 'யௌவனத்தை வழங்கிய கந்தர்வனுக்கு"
3. அக்நயே .... 'நல்ல ரூபத்தை வழங்கிய அக்நி தேவனுக்கு"
4. கந்யலா ... 'இந்த கந்யை பித்ரு குலத்திலிருந்து பர்தாவின் குலத்திற்குச் செல்கிறாள் அங்கும் அவள் நலமுடன் இருக்க ப்ரார்தனை"
5. ப்ரோதோமுஞ்சாதி ... 'பித்ரு குலத்திலிருந்து விடுவித்து பதிகுலத்தில் வேரூன்றி, அங்கு புத்திரர்களையும், ஐஸ்வர்யத்தையும் பெற்று விளங்க இந்திரனின் அருளுக்காக"
6. இமாந்த்வமிந்த்ரம்... 'இந்த்ர தேவா! இவள் பத்து பிள்ளைகளைப் பெற்றாலும் அதன்பிறகும் பதியிடம் அலுப்புத்தோன்றாமல் புதிதாகப் பிறந்த பதினோராவது பிள்ளைபோல் பாவிக்கும்படி அருள்வாயாக"
7. அக்நிரைது ... 'அக்நி, வருண தேவர்கள் இவள் பெற்ற பிள்ளைக்கு மரணம் சம்பவிக்காமலும், அதுபற்றிய பயமும் இந்த கன்னிகைக்கு இல்லாமல் எப்போதும் சுகித்திருக்க அருள்வீராக"
8. இமாமக்நிஸ்த்ராயதாம் .... 'இவள் மடியில் எப்போதும் பிள்ளை உள்ளவளாகவும், பிள்ளைகளின் உடல்நலம் குறித்த பயமின்றி, அநுதினமும் ஆனந்தத்துடனேயே வாழக்கூடியவளாயும் அருள அக்நிதேவனையும், க்ருஹபதி தேவனையும் வேண்டுகிறேன்"
9. மாதே க்ருஹே ... 'இந்த வதுவானவள் நள்ளிரவில் துக்கஸம்பவத்திற்காக ஓலமிடும் அவலமின்றி, புத்ர, பௌத்ராதிகளுடன், சுமங்கலியாக, பதியை பிரியாதவளாய் வாழ்நாள்வரை விளங்க அனைத்து தேவதைகளும் அருள்புரியவேண்டும்".
10. த்யௌஸ்தே... 'இக்கன்னியின் பின்புறத்தை ஆகாசமும், துடைகளை வாயுவும், ஸ்தனங்களை அச்விநீ தேவர்களும் காப்பாற்றட்டும். மேலும் இவளை ப்ருஹஸ்பதி, விச்வேதேவர்களும் ரக்ஷிக்கட்டும், இவள் குழந்தையை ஸவிதா (சூரியன்) ரக்ஷிக்கட்டும்.
11. அப்ரஜஸ்தாம் ... 'வாடிய புஷ்பத்தை எடுத்து வேறு இடத்தில் எறிவதுபோல், உன்னிடம் மலட்டுத்தன்மை, கணவனை, குழந்தைகளை பாதிக்கும் தோஷங்கள் எது இருந்தாலும் அவை சத்ருக்களிடத்தை சென்றடையட்டும்"
12, 13. இமம்மே வருண, தத்வாயாமி... 'வருண தேவனை ஸ்துதி செய்கிறேன், இதுவரை நான் ப்ரார்தித்த அனைத்தும் விரைவில் நிறைவேற அருள்புரியும் என்று, வருணன் குற்றங்களைப் பொறுத்து, கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றை அவற்றை அனுபவிக்க தீர்காயுளையும் கொடுப்பாராக.
14. த்வந்நோ, 15.ஸத்வந்நோ அக்நே, 16. த்வமக்நே .... 'அக்நிதேவன் மற்ற தேவர்களுக்கு வழங்கப்படும் ஹவிஸ்ஸை சுமந்து செல்பவர், அதனால் அந்த அக்நிதேவன் வருண தேவனை நிர்பந்தித்து என் கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்யவேண்டும். மேலும் அக்நி பகவாந் எப்போதும் நாங்கள் அளிக்கும் ஹவிசுகளைப் ஏற்றுக்கொண்டு எங்களுக்கு நல்லாசிகள் வழங்கிக்கொண்டிருக்கவேண்டும்.

அஸ்மாரோஹணம் (அம்மி மிதித்தல்)
ஆதிஷ்டேமம் அஸ்மாநம் அஸ்மேவத்வம் ஸ்திராபவ. அபிதிஷ்ட ப்ரதந்யத: ஸஹஸ்வ ப்ரதநாயத:.
'ஹே வதுவே நீ இந்த பாரங்கல்லின் ஏறி நில். இதனால் அதன் உறுதித்தன்மை உனக்குப் புலனாகும்.  நீ உறுதியிலும், பொறுமையிலும் இந்த கல்லைப்போல் இருருந்து, உன்னை எதிர்ப்பவர்களிடத்தும், உன் நற்பண்புகளை குலைத்துக் கெடுவழியில் இட்டுச்செல்பவர்களிடத்தும், குடும்பத்துக்கு கேடுவிளைவிக்கும் சத்ருக்களிடத்தும் உறுதி, பொறுமை காத்து வெல்வாயாக. நம்மிருவரிடையே இந்த திருமண  பந்தத்தால் ஏற்பட்ட நல்ல நட்பிலும் இந்த உறுதித்தன்மையை காத்துவருவாயாக. 
லாஜஹோம் (பொறி இடுதல்)
இந்தப் பொறி இடுதல் என்னும் வழக்கம், அக்கினியின் முன்னால் தம்பதிகள் உட்கார்ந்திருக்க, பெண்ணின் சகோதரன் நெற்பொறியை எடுத்து இரண்டு தடவை பெண்ணின் இரு கைகளிலும் போட வேண்டும்.  இரு கைகளிலும் ஏந்தி வாங்கிக் கொண்ட அந்தப் பொறியை, மணமகன் மனமகளின் கையைப் பிடித்து அக்கினியில் சேர்ப்பிக்க வேண்டும்.  இந்த லாஜஹோமம் என்பது சூரியனை உத்தேசித்துச் செய்யப்படுவதாகும்.  சூரியன் உலகத்தில் முதற் பிரகாசமான கடவுளாகக் கீர்த்தியோடு பிரகாசிப்பதைப் போன்று தன் கணவனும் சகல கீர்த்திகளோடு பிரகாசிக்க வேண்டுமென்ற பெண்ணின் பிரார்த்தனையும், சூரியனோடு இணை பிரியாதிருக்கும் சாயாதேவி போன்று தாமும் ஒற்றுமையாகப் பிரியாது எந்தக் காரியத்தையும் நிறைவேற்ற வேண்டுமென்ற வரனின் ஸங்கல்பமுமாக இந்த ஹோமத்தின் தத்துவம் கூறப்படுகிறது. மூன்று ஹோமம்.
1. இயம் நாரி ... பொரியினால் ஹோமம் செய்யும் இந்து வது தன் கணவன் நூறு வருடங்கள் ஜீவித்திருக்கும்படி அக்கிதேவனை வேண்டிக்கொள்கிறாள்.
2. அர்யமணம் நுதேவம் ... அர்யம தேவனை பொரியினால் பெண்கள் யாகம் செய்து பயனடைந்துள்ளனர். அதுபோல் இந்த வது அர்யம தேவனுக்கு இந்த பொரிஹோமத்தைக் காணிக்கையாக்கி பித்ருகுலத்திலிருந்து பதிகுலத்திற்கு வந்துள்ள என்னால் இந்தகுலத்திற்கு எல்லா நன்மைகளும் ஏற்படவேண்டும் என ப்ரார்திக்கிறாள்.
3. த்வமர்யமாபவஸி ...  'அக்நி தேவனே ஸோம, கந்தர்வர்களுக்குப் பின் அக்நியாகி நீர்தான் இந்த பெண்ணை கடைசீயாக ரக்ஷித்து, ஒரு தந்தைபோல் (தாதா) இந்த வரனுக்கு அளித்துள்ளீர், இனி அவள் இந்த வரனின் குடும்பத்தில் வேரூன்றி இருவரும் ஒத்த மனதுடையவர்களாய் வாழ்க்கை நடத்திட தேவையான அனைத்துச் க்ஷேமங்களையும் அருள்வீராக".
ஒவ்வொரு முறையும் ஹோமம் செய்தவுடன் அக்நியைச் சுற்றி வரும்போது, அக்நிதேவனை துதித்து வேண்டுவது 'துப்யமக்ரே பர்யவஹந் ...." உம்மிடம் உள்ள சூர்யா என்ற சக்தியைக் கொண்டு, இவளுக்குப் பிறக்கும் ப்ரஜைகளை ரக்ஷித்தருளவேண்டும்.

Monday 25 June 2012

பாணிக்ரஹணமும் ஸப்தபதியும்

தாஸன்,

பாணிக்ரஹணம்

பாணிக்கிரஹணம் என்பது பெண்ணின் கையைப் பிடித்தல் என்பது பொருளாகும். கைப்பற்றி உரிமையாக்கிக்கொள்ளுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.  பெண்ணின் வலது கையிலுள்ள ஐந்து விரலையும் குவித்த முறையில் சேர்த்து மணமகன் பிடிக்க வேண்டுமென்பது விதியாகும்.  மணமகனின் கை மேலேயும் பெண்ணின் கை அதில் அடங்கியும் இருக்க வேண்டும்.  இந்தப் பாணிக்கிரஹணம்,  நல்ல சத்புத்திரர்களைப் பெறுவதற்கும் அதனால் தேவர்களும், ரிஷிகளும், பித்ருகளும் சந்தோஷம் அடைவதற்கும் ஹேதுவாக விளங்குகிறதென்று சொல்லப்பட்டிருக்கிறது.  சூரியன், சந்திரன், தேவேந்திரன் முதலான தேவர்கள் இந்தப் பாணிக்கிரஹணத்தால் சிறப்பு அடைந்திருக்கிறார்கள்.  ஸரஸ்வதி, லட்சுமி, இந்திராணி முதலான தேவதைகளும் பாணிக்கிரஹணத்தை ரக்ஷித்து, சகல சௌபாக்கியங்களையும் அளித்து இல்லற வாழ்க்கையை இனிது நடத்தி சத்புத்திரர்களைப் பெற உதவட்டும் என்று ப்ராத்திக்கப்படுகிறார்கள்.  

மிகவும் போற்றி வணங்குகின்ற இராமாயணத்தில் சீதையின் கையை இராமன் கையால் சேர்த்துப் பிடிக்க வேண்டுமென்று வால்மீகி கூறுகிறார்.  ஜனகன் வம்சமும் - தசரதன் வம்சமும் தழைத்தோங்க இந்தப் பாணிக்கிரஹணம் உதவட்டும் என்ற கருத்தில் "இயம் சீதா மமசுதா" என்ற ஸ்லோகம் மூலம் குறிப்பிட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

மேலும், மாங்கல்யதாரணத்தைக் காட்டிலும் பலமடங்கு முக்கியமானது இந்த பாணிக்ரஹணமும், ஸப்தபதியும் என்பதைக் காண்போம்.
நாச்சியார் திருமொழி - வாரணமாயிரத்தில் ....
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன்
காளை புகுதக் கனாக்கண்டேன்
அந்தரிசூட்டக் கனாக்கண்டேன்
காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன்
அதிரப்புதக் கனாக்கண்டேன்
கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன்
கைபற்றித் தீவலம்செய்யக் கனாக்கண்டேன்
அம்மிமிதிக்கக் கனாக்கண்டேன்
பொரிமுகம் தட்டக் கனாக்கண்டேன்
மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன்
என்று விவாஹ காரிகைகளை வரிசையாக எடுத்தியம்பும் ஆண்டாள் எங்கும் 
"மங்கல நாண் சூட்டவென்றோ" "மாங்கல்யம் சூட்டவென்றோ" தெரிவிக்காததால் மாங்கல்ய தாரணம் என்ற, 
க்ருஹ்ய சூத்திரத்தில் சொல்லப்படாத ஒரு நிகழ்ச்சி, அண்மைக் காலத்தில் ஏற்பட்ட ஒன்றே என்பது தெளிவாகிறது. 
மற்றும் இன்றும் திருமண பத்திரிகைகளில் பெண்வீட்டார் "கன்னிகாதானம் செய்துகொடுப்பதாய்" என்றும், பிள்ளை வீட்டார் "பாணிக்ரஹணம் செய்துகொள்வதாய்" என்றும்தான் ப்ராதான்யமாக தெரிவிக்கிறார்கள். 
அந்த பாணிக்ரஹணமாகிய நிகழ்ச்சியை அநுக்ரஹித்து ஆசீர்வதிக்க வேண்டும் என்றுதான் பத்திரிகை வாயிலாக விண்ணப்பித்துக்கொள்கிறார்கள். 
மேலும், இந்து திருமண சட்டப்படியும் "ஸப்தபதி" என்கின்ற நிகழ்ச்சி நடந்து முடிந்தால்தான் திருமணம் முடிவடைந்தாக சட்டப்படி செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
எனவே அண்மையில் ஏற்பட்ட மாங்கல்யதாரணம் என்ற நிகழ்ச்சி வழங்கும் முக்கியத்துவத்தைப்போல் பலமடங்கு முக்கியத்துவத்தை "பாணிக்ரஹணம்", "ஸப்தபதி" ஆகிய 
அதிமுக்கியமான வேத முக்கியத்துவம், சாஸ்த்ர முக்கியத்துவம், சட்ட முக்கியத்துவம், ஸம்ப்ரதாய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளுக்கும் வழங்கி மேலும் ஒரு பத்து நிமிடங்களில் முடிந்துவிடக்கூடிய அந்த நிகழ்ச்சிகளும் முடியும்வரை 
அனைவரும் பொறுமை காத்து மணமக்களை மனமார ஆசீர்வதிப்பதே சாலச்சிறந்ததாகும்.

பாணிக்ரஹண 4 மந்த்ரங்கள்
க்ருப்ணாமி தே ஸுப்ரஜாஸ்த்வாய :- ஏ வதுவே! தர்மத்தின் வழி நடக்கும்படியான நல்ல குழந்தைகளைப் பெறுவதற்காக உன் திருக்கரங்களைப் பற்றுகிறேன். கணவனாகிய என்னுடன் கிழத்தன்மை அடையும்வரை சேர்ந்து வாழ்ந்து இல்லற சுகங்களைத் துய்ப்பாயாக. பகன், அர்யமா, ஸவிதா, இந்த்ரன் ஆகிய தேவர்கள் சிறந்த இல்லறத்தை நடத்தும் பொருட்டு உன்னை எனக்கு மனைவியாகவும், உற்ற தோழியாகவும் அளித்துள்ளார்கள்.

தேஹ பூர்வே ஜநாஸ: :- இந்த விவாஹ தர்மத்தை ஏற்படுத்தியவர்களான முன் சொன்ன தேவர்களும், முன்னோர்களும் அந்த தர்மத்தை அநுஷ்டித்து வந்தனர். தேவர்களில் தலையாயவனான அக்நியும், முன்னவனான ஸூர்யனும் இந்த விவாஹ தர்மங்களில் ஸம்பந்தம் உடையவர்களாவர்.

ஸரஸ்வதி :- சுபமான அழகுள்ளவளும், அன்னத்தைக் கொடுப்பவளுமான ஏ ஸரஸ்வதி தேவியே! நீயும் இந்த பாணிக்ரஹண வைபவத்தை ரக்ஷித்துக் காப்பாயாக. நாங்கள் இந்த ஸபையிலுள்ளோர் அனைவரின் முன்னிலையில் அனைத்து ஜீவராசிகள் சாட்சியாக உன்னைத் துதிக்கிறோம்.

ய ஏதி ப்ரதிஶ: எந்த வாயு தேவன், திக்குகள் - உப திக்குகள் என்று எல்லா திசைகளிலும் தடையின்றிச் ஸஞ்சரிக்கிறானோ, அன்னத்தைக் கொடுக்கும் அக்நியின் தோழனும், ஹிரண்யத்தை (தங்கத்தை) கையில் அணிந்திருப்பவனுமான அந்த வாயுதேவன் வதுவே! உன்னை என்னிடம் மாறாத, உறுதியான அன்புள்ளவளாகச் செய்யட்டும்.

ஸப்தபதி

பெண்ணின் வலது காலை மாப்பிள்ளை இடது கையால் பிடித்து ஒவ்வொரு அடியாக ஏழு அடி எடுத்து வைப்பதை ஸப்தபதி என்று குறிப்பிடப்படுகிறது. விவாஹ க்ரியைகளிலேயே இது மிகவும் பொருள்பொதிந்தது. ஒரு பெண்ணும், ஆணும் இல்லற வாழ்க்கையை எப்படிப் பகிர்ந்துகொள்ளவேண்டும் எப்படி ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்கவேண்டும் என்பதுபற்றி வேதம் மிக உயர்ந்த உதாரணங்களைக் கொண்டு அழகாக விளக்கிக் கூறியுள்ளது. வரன் வதுவைப் பார்த்து "ஏ பெண்ணே, உன் கையை வேதமந்திர ப10ர்வமாகப் பற்றி என் சொத்தாக ஆக்கிக்கொண்டபின், என் தர்ம பத்திநியாக என்னுடன் முதன் முதலாக அடி எடுத்து நடந்து வரப்போகிறாய். உன்னை எனக்கு தர்மபத்தினியாக்கிக் கொடுத்த அந்த தேவர்களின் முன்னிலையில் நான் விஷ்ணு பகவானை, உன்னுடனான இல்லறத்திற்கு எனக்குத் தேவையான ஏழுவிதமான பாக்கியங்களை அருளும்படி கோரப்போகிறேன்" என்று அவளுடைய காலைப் பற்றி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் ஒவ்வொரு விண்ணப்பமாக வெளியிடுகிறான்....

7 மந்திரங்கள். பாணிக்ரஹணம்போல் இதுவும் முடிந்தால்தான் விவாஹம் முடிந்ததாகப் பொருள்.
"ஏகம் இஷே விஷ்ணுத்வாந்வேது" ... முதலடியால் "அன்னங்கள் குறைவின்றி கிடைக்க விஷ்ணு உடன் வரட்டும்"
"த்வே ஊர்ஜே ..." இரண்டாமடியால் "நம் தேஹத்தின் ஆரோக்யத்தை ரக்ஷிக்க விஷ்ணு தொடரட்டும்"
"த்ரீணி வ்ரதாய..." மூன்றாமடியால் "வ்ரத கலாசாரங்களை காக்க விஷ்ணு உடன் வரட்டும்"
"சத்வாரி மாயோபவாய" நான்காவதால் "ஸகல இன்பங்களும் கிட்ட விஷ்ணு உடன் வரட்டும்"
"பஞ்ச பசுப்பய:" ஐந்தாவதால் "வளர்ப்பு ப்ராணிகளை நல்கி ரக்ஷிக்க விஷ்ணு உடன் வரட்டும்"
"ஷட்ருதுப்ய:" ஆறாவதால் "ஆறு பருவ காலங்களும் நமக்குச் சாதகமாக விஷ்ணு உடன் வரட்டும்"
"ஸப்தஸப்தப்ய:..." ஏழாவதால் ஏழுவிதமான யாகங்களும், அதன்பயன்கறும் நல்க விஷ்ணுவும் வரட்டும்" என்று விஷ்ணுவை ப்ரார்த்திக்கிறான். ஹோதா, ப்ரசாஸ்தா, ப்ராஹ்மணாச்சம்ஸீ, போதா, நேஷ்டா, அச்சாவாக, ஆக்நீத்ர என்ற 7விதமான ருத்விக்குகளை (யாகத்தில் பங்ககேற்போர்) கொண்டு செய்யப்படுகிற ஸோம யாகாதி ஸத்கர்மாக்களை அநுஷ்டிக்கும்படியான பாக்யம் ஏற்பட ஸ்ரீமந்நாராயணன் தொடர்ந்து வந்து அநுக்ரஹிக்கட்டும்.
7ம் அடி முடிந்ததும் தொடர்ந்து ஜபிக்கப்படவேண்டிய மிக உயர்ந்த கருத்துடைய மந்த்ரம்:

"ஸகா ஸப்தபதாபவ..." என்கிற மந்திரத்தால் தன் புதிய இளம் மனைவியிடம் நாம் எப்படிஎப்படி இருக்கவேண்டும் என்பதை பகிர்ந்துகொள்கிறான்...
"ஏ வதுவே, ஏழு காலடி வைத்து என்னுடன் தொடர்ந்த நீ, இன்றுமுதல் எனக்கு வேதப்ரமாணமான ஸகி (ஸம்ஸ்க்ருதத்தில் நண்பனுக்கு "ஸகா" என்றும் அதற்கு பெண்பால் "ஸகி" என்றும் பெயர்) ஆகிவிட்டாய். நாம் பரஸ்பரம் நண்பர்காளகிவிட்டோம். இந்த நட்பிலிருந்து நான் ஒருபோதும் நழுவமாட்டேன். நீயும் நம் நட்பில் இந்தப் பாராங்கல்லைப்போல் (அம்மி போல்) உறுதியுடன் இருப்பாயாக. நான் விஷ்ணுவிடம் வேண்டிப்பெற்ற அனைத்தையும் நாம் இருவரும் சேர்ந்து அனுபவிப்போம். இவ்வுலகில் ஒன்றைத் தவிர்த்து மற்றொன்று நிலைக்காததான பல்வேறு தத்துவங்கள் போல் நாம் இருவரும் இணை பிரியாதிருப்போம். நான் ஆகாயமானால் நீ பூமியாக இரு, நான் உயிரணுவானால் நீ உயிரைத் தாங்கும் கர்பக்ருஹமாய் இரு, நான் மனமானால் நீ வாக்கு எனும் சொல்லாக இரு (மனதால் நினைக்காத எதையும் வாயினால் பேச இயலாது), நான் ஸாம கானமானால் அந்த கானத்திற்கு கருப்பொருளான ருக்காக விளங்கு, இப்படி அநுஸரணையாய் இருவரும் இருந்து இன்பத்தின் சிகரங்களை எட்டுவோம், ஈடுஇணையில்லா புத்திரர்களையும், மஹாலக்ஷ;மிபோன்ற பெண் மகவையும் பெற்று கிழத்தன்மை அடையும்வரை சுகித்துக்கிடப்போம் வா என் ஸூந்ருதே" 
குறிப்பு:- ப்ரியமானவளே, ஸுகம், சுபம், சௌக்யம், ஸுகந்தம், ஸுந்தரம், ஸுமங்களம், ஸுப்ரம், இன்பம், இனிமை என „ஸு… என்ற அடைமொழி பெறும் அனைத்து நற்றன்மைகளுக்கும் இலக்கணமானவள் என்ற பொருளுடைய ஒரே வார்த்தை „ஸூந்ருதே… என்பதாகும்.

அனேகமாக எல்லாவித பிழையையும் நீக்கி கன்வர்ட் செய்யுமாறு கன்வெர்டிங் ப்ரோகிராமில் நேற்று திருத்தம் செய்துள்ளேன்.
ஏதேனும் பிழை தென்பட்டால் தயவுசெய்து குறிப்பிடவும்.

நாளை ஒரு பதிவிற்குப் பிறகு அடியேன் பெங்களுரில் திருமணம் செய்துவைக்கச் செல்லவேண்டியிருப்பதால்
27க்குப் பிறகு 30ம்தேதி முதல் மீண்டும் தொடர்கிறேன்.
முடிந்தால் நாளைக்குள் விவாஹ மந்த்ரங்களை முடிக்க முயற்சிக்கிறேன்.
கடந்த சில நாட்களாக எந்தவித பின்னூட்டமும் இல்லை?!
தாஸன்
என்.வி.எஸ்

Subhaasubha mantranta bhashyam

Sri:
இன்றைய பதிவில் மந்திரங்களுக்கான நேரடி பொருளுடன் சொந்தக் கருத்துகள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. மன்னிக்கவும்.


கூரைப்புடவை வழங்குதல்
குறிப்பு:- கூரை வஸ்த்ரம், கோடி வஸ்த்ரம் என்றால் புதிய துணி என்று பொருள். 
பரித்வா கிர்வணோ கிர: ஏ தேவேந்த்ர தேவனே! எப்படி அனைவரிலும் உயர்ந்தோரான தேவ தேவர்கள் அனைவரும் உம்மைச் சூழ்ந்திருந்து துதிக்கின்றனரோ, அதுபோல் இந்த புதிய புடவையானது இவளது மேனியைச் சூழ்ந்திருந்து இவள் எப்போதும் ஸெளபாக்யம் நிறைந்தவளாக இருக்கவேண்டும் என்று அநுக்ரஹிக்கவேண்டும். பரிசுத்தமான மரகதம் வைரம் போன்றவற்றையும் சாளக்ராம பெருமாளையும் நாம் பட்டு வஸ்திரத்தில் வைத்து பாதுகாப்பதுபோல, மிகவும் பரிசுத்தமான மங்களகரமான இந்த வதுவை வரன் ஒரு புதிய பட்டு வஸ்திரத்தை கொடுத்து வாங்கிக் கொள்கிறான். அந்த வஸ்திரத்தைக் கொடுக்கும்போது இவளை பரிசுத்தம் செய்ய அநுக்ரஹித்த தேவதைகளை 'இந்த வதுவை இந்த பட்டு வஸ்த்ரம் சூழ்ந்திருப்பதுபோல் என்னுடைய ஸ்தோத்திரங்கள் தேவதைகளான உங்களைச் சூழ்ந்திருக்கட்டும், நாங்கள் எப்போதும் க்ஷேமமாக இருக்க அநுக்ரஹியுங்கள்" என்று வேண்டிக்கொண்டு புடவையை வதுவுக்கு ஆசீர்வதித்துக் கொடுக்கிறான்.
திருமாங்கல்ய தாரணம்
பெண் புடவையை உடுத்திக்கொண்டு வந்ததும் 
திருமாங்கல்யம் புஷ்பம் வகையறாவை தாம்பாளத்தில் வைத்து பெரியவர்களிடம் காட்டி அவர்கள் தொட்டு அநுக்ரஹம் செய்வது வழக்கம்.  பின்னர், பெண்ணின் தகப்பனார் மடியில் மணப்பெண்ணைக் கிழக்கு நோக்கி உட்கார வைத்து, மணமகன் மேற்கு நோக்கி இருந்து, 
'மாங்கல்யம் தந்துநா அநேந மம ஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி சுபகே த்வம் ஜீவ சரதஸ்சதம்"
என்ற ச்லோகத்தினால் மாங்கல்ய சூத்ரம் அணிவிக்கிறான். 
'நான் ஜீவித்திருப்பதற்கு ஹேதுவாக கயிற்றினால் ஆன இந்த மங்கள சூத்திரத்தை உனது கழுத்தில் அணிவிக்கிறேன் நீ நூறாண்டுகள் சுமங்கலியாக வாழ்வாயாக"  என்று வாழ்த்தி அணிவிக்கிறான்.
இந்த மங்களத்தை ரக்ஷித்தருளும்படி பகவான் விஷ்ணு, மதுசூதனன், புண்டரீகாக்ஷன், கருடத்வஜன் என்னும்  திருநாமங்களால் எம்பெருமானை ப்ரார்த்திக்கிறான்.
பெண்ணின் கழுத்தில் தாலி கட்டும் பொழுது மாப்பிள்ளை ஒரு முடிபோடுவதென்றும், பின்னர் மாப்பிள்ளையின் சகோதரி அதாவது பெண்ணின் நாத்தனார் மேலும் இரு முடிகள் போடுவதென்றும் ஸம்பிரதாயம். 
குறிப்பு:- இந்த திருமங்கல்ய தாரணம் செய்வதற்கான மந்த்ரமோ, ப்ரயோகமோ 1950க்கு முன் வெளியான புத்தகங்கள், க்ரந்தங்கள் எதிலும் காணப்படவில்லை. நாச்சியார் திருமொழி - வாரணமாயிரத்திலும் 'மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்" என்றுதான் உள்ளது. 'மாங்கல்யம்" பற்றி எதுவும் இல்லை. அடுத்ததாக வரும் தர்பக் கயிறு கட்டும் ப்ரயோகத்தை அநுஸரித்து, நுகத்தடியின்மீது பரிசுத்திக்காக உபயோகப்படுத்தப்பட்ட தங்க வில்லைகளை கயிற்றில் கோர்த்து கழுத்தில் கட்டும் பழக்கம் பின்னாளில் மாங்கல்யதாரணம் என்ற ஒரு ஸம்ப்ரதாயமாக ஏற்பட்டிருக்கவேண்டும். 

பெண்ணுக்கு யோக்த்ரம் எனும் தர்பக் கயிறு கட்டும் மந்த்ரம்:
ஆசாஸாநா :- (முதல் காண்டம் முதல் ப்ரச்நம்) ஓ அக்னி தேவனே! உம்மை நான் ஆராதிக்கும்போது என்னுடன் இருந்து ஒத்துழைக்கும் இந்த கந்யைகைக்கு, மனஅமைதி, நல்ல பிள்ளைச் செல்வங்கள், தேவையான செல்வம், நிறைந்த அழகு, இல்லறம் நடத்த தேவையான அனைத்து வசதிகளையும் இவள் உம்மிடம் வேண்டுகிறாள். இவைகளை நீர் இவளுக்கு அநுக்ரஹிக்கவேண்டும் என்பதற்கர்கவும், இந்த இல்லற வேள்வியில் இவளை இணைத்து பந்தப்படுத்திக்கொள்வதற்காகவும், இவளை இந்த தர்பக் கயிற்றினால் கட்டுகிறேன்.
நல்ல மனது, குழுந்தைகள், ஐஸ்வர்யம், அழகுள்ள சாPரம் என எண்ணிறந்த ஆசைகளுடன் என்னை அடைந்திருக்கும் இந்த வதுவை அவற்றை அளிக்கவல்ல தேவதைகளின் ஆராதனமான இந்த விவாஹ ஹோமத்திற்காக இந்த தர்பக் கயிற்றினால் சுபமாக கட்டுகிறேன்.
 (இல்லறத்தான் (க்ருஹஸ்தன்) மட்டுமே வேள்விகள் செய்ய அதிகாரம் உள்ளவன் என சாஸ்த்ரம் பகர்வதால், இன்று முதல் என் ஆயுள் உள்ளவரை இவள் என்னுடன் இணைந்து அனைத்து வேள்விகளிலும் பங்கேற்றுப் பெறும் நன்மைகளை இருவரும் சமமாக அநுபவிப்போமாக.) 
பெண்ணை விவாஹ அக்னியின் ஸமீபத்தில் (அக்னிக்கு மேற்கே கணவனுக்கு வலது பக்கத்தில் முதன் முதலாக உட்கார வைக்க (பதவி நாற்காலியில் அமர வைத்தல்) மந்த்ரம்:
பூஷாத்வா இதோநயது ....
ஏ பெண்ணே! இன்றைய விவாஹ கர்மா முடிந்ததும் பூஷா என்னும் தேவனின் அருளாசியுடன் நான் உன்னை என் வீட்டிற்கு உன் கையைப்பற்றி அழைத்துச் செல்வேன். அப்போது முதல் நீ என் வீட்டிற்கு யஜமானியாக விளங்குவாயாக. பின்னர் நாம் செய்யவேண்டிய நற்காரியங்கள் அனைத்திலும் எனக்கு நல் ஆலோசனைகளைக் கூறுவாயாக.
ஏ வதுவே, பூஷா, அச்விநீ முதலிய தேவர்கள் உனக்குத் தேவையான பாதுகாப்பை அளித்து என் க்ருஹத்திற்கு கொண்டுவிடுவார்கள் இன்று முதல் அங்கு நீ என் க்ருஹத்திற்கு ஈ˜;வரியாக ஸர்வ சுதந்திரத்துடன் இருந்துகொண்டு என்னுடன் அனைத்து யாக யஜ்ஞங்களையும் செய்து அனைவருடைய அன்பையும் பெறுவாயாக.
குறிப்பு:- நிச்சயதார்த்த மந்திரத்திலேயே 'மூர்தாநம் பத்யுராரோஹ" என்று என்று வீட்டிற்கு யஜமானியாக விளங்குவாய் என்று சொல்லப்பட்டது இங்கு விவாஹபந்தம் முடிந்ததும் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. யஜமானி என்றால் தன் அதிகாரத்தால் அனைவரையும் துன்புறுத்தும் உரிமையைப் பெறுவதல்ல! சொத்தைப் பாதுகாத்து விரிவுபடுத்துபவனே யஜமானன். அதுபோல் வீட்டிலுள்ள அனைத்துச் சொந்தங்கள், வேலைக்காரர்கள், செல்லப் ப்ராணிகள் அனைவரிடத்தும் கனிவுடன் நடந்து, அவர்கள் நன்மைக்காகவே எப்போதும் சிந்தித்து அவர்களை மேன்மையடையச் செய்து, அன்பினால் அரவணைத்துச் செல்பவளே சிறந்த யஜமானியாகும்.

ப்ரஹ்மாவை வரிப்பது, அக்னி கார்யத்திற்கு தேவையான பாத்திரங்களை சுத்தி செய்வது போன்ற பூர்வாங்க விவாஹ அக்னி கார்யம் ஆனதும் வரன் வதுவைத் தொட்டுக் கொண்டு சொல்லவேண்டிய மந்த்ரம் பின்வருவது.
கந்யா அபிமந்த்ரணம்
ஸோம ப்ரதம: ....
ஏ பெண்ணே! முதலில் உன்னை ஸோமதேவன் அடைந்தான், இரண்டாவதாக விச்வாசு என்னும் கந்தர்வ தேவன் அடைந்தான், மூன்றாவதாக அக்னி உனக்கு பதியானான். (இம் மூன்று தேவர்களும் முறையே பெண்ணுக்குத் தேவையான குணம், இளமை, அழகு இவற்றை அளித்ததாக வேதம் குறிப்பிடுகிறது).
பிறந்தது முதல் பருவ காலம் வரை ஒரு கன்னிப்பெண்ணுக்கு தேவையான குணம், சாPர லக்ஷ;ணங்களையும், பாதுகாப்பையும், போஷாக்கையும் கொடுக்க முறையே ஸோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவர்களின் அருளால் கிடைக்கப்பெறுகிறது. ஸோமன் (சந்திரன்) குளிர்ந்த மனத்தையும், கந்தர்வன் யௌவனத்தையும் (பருவகால அழகு), அக்னி ஒளிவிடும் ரூபத்தையும் அளித்துவருவதையே நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறாள் என்று கூறுகிறோம்.

ஸோமோததது கந்தர்வாய ....
இவளை முதலில் ஸோமன் அநுக்ரஹித்து கந்தர்வனிடம் கொடுத்தான், கந்தர்வன் பிறகு இவளை அக்னியிடம் ஒப்புவித்தான். இப்போது இந்த அக்னிதேவன் இவளையும், புத்ரஸந்தானத்தையும், பரிபாலிக்கத் தேவையான தனங்களையும் எனக்கு அளிக்கவேண்டுமாய் அக்னிதேவனை ப்ரார்த்திக்கிறேன்.
ஸோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவதைகளை எங்களுக்குத் தேவையான தனங்கள் மற்றும் புத்ர ஸந்தானங்களை அளித்து ஆசீர்வதிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன்.

குறிப்பு:- இந்த மந்திரம்பற்றி ஒரு ஸ்வாரஸ்யமான சரித்திர ஸம்பவமும், அதை ஒட்டி நாத்திகர்களால் எழுப்பப்படும் அபவாத்திற்கான ஸமாதானத்தையும் இங்கு காண்போம்.
நம் பூர்வாசார்யர்களில் ஒருவரான யாமுனாசாரியர் தன் குருவாகிய மஹாபாஷ்யபட்டருக்காக ஆக்கியாழ்வான் என்பவனை எதிர்த்து வாதிடும்போது, அவன் முன்னே, மறுத்து வாதிட இயலாததான 1. உன் தாய் மலடி அல்லள், 2. மஹாராஜா குற்றமற்றவன், 3. மஹாராணி கற்புக்கரசி என 3வாதங்களை வைத்து இவற்றை மறுத்து வாதிட்டால் நீர் வென்றவராவீர் என்றார். ஆக்கியாழ்வானால் முடியாதபோது, மஹாராணியின் உத்தரவுப்படி தானே அவற்றை மறுத்து நிரூபித்தார். 1. 'ஒருமரம் தோப்பாகாது ஒன்றைப்பெற்றவள் தாயாகாள்" என்ற ஆதார வசனத்தைக் கூறி முதலாவதையும், 2. 'குடிமக்களின் குற்றங்கள் கொற்றவனையே சாரும்" என்ற கூற்றால் இரண்டாவதையும், 3. மேற்படி 'ஸோம: ப்ரதம:" என்கிற மந்திரத்தை ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டு மஹாராணி கற்புக்கரசி அல்ல என்று வாதிட முடியும் என்றும் நிரூபித்து 'ஆளவந்தார்" என்ற பட்டத்தையும் பாதி ராஜ்யத்தையும் பெற்றார் என்பது சுவையான சரித்திர ஸம்பவம்.
இதே வாதத்தை நாத்திகர்கள் முன்வைத்து, மூவர் மணந்த பெண்ணை நான்காவதாக ஒருவனுக்கு மணம் செய்து வைப்பதாய் ப்ராமணர்கள் ஒரு இழுக்கான ஸம்ப்ரதாயத்தை கையாளுகின்றனர் என்று ப்ரசாரம் செய்கின்றனர். 
ஒரே ஒரு சிறிய நிகழ்ச்சியின் சிறிய பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தால் எதிலும் சரியான நிலைப்பாட்டை எட்ட முடியாது. 

'மாநிலம் சேவடியாக து}நீர் 
வளைநரல் பௌவம் உடுக்கையாக
விசும்பு மெய்யாக, திசைகள் கையாக  
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய  
வேதமுதல்வன் என்ப 
தீதறவிளங்கிய திகிரியோனே"
என்றார் பரம்பொருளைப் பாரதம்பாடிய பெருந்தேவனார் நற்றிணையில்.
நாத்திகர் நம் வேதத்தை ஆதாரமாகக் கொள்ளாவிடினும் சங்க இலக்கியத்தை மறுக்கமாட்டார்கள் என்பதால் இதை இங்கு எடுத்துக்கொண்டோம். ஆகாயம், காற்று, தீ, நீர், நிலமாகிய ஐம்பூதங்களும் பரம்பொருளின் அங்கம். மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் ஐம்பூதங்களின் கலவை. அக்நி எனும் தீயைப்போலவே, மதியமாகிய ஸோமனும், கந்தர்வனும் பரம்பொருளின் அங்கமே, கந்தர்வ, ஸோமர்களின் கூறுகள் சேர்வதாலேயே இளமங்கை சோபிக்கிறாள் என்ற கருத்தையே அந்த வேத வாக்கியம் புலப்படுத்துகிறதே அன்றி ஸோம, கந்தர்வ, அக்நியாதிகள் விவாஹம் செய்து, பின் விவாஹரத்து செய்து கொண்ட பெண் என்பதல்ல பொருள்.
மேலும் இந்த நாத்திகர்கள் கவலைப்படுவதெல்லாம் பெண்ணின் கற்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள் இந்த ப்ராஹ்மணர்கள் என்பதுதான். இன்றுவரை சாஸ்த்ரம் கூறுவது, ப்ரயோகம் கூறுவது கந்யை என்று அதாவது பூப்படையாதவள் என்று. பூப்படையாத சிறுமியைத்தான் மூன்று தேவர்களும் தங்கள் அநுக்ரஹத்தால் பூப்படையச் செய்யும் யௌவனத்தை வழங்குகிறார்கள். இதில் கற்பு பற்றி கவலைப்பட ஏதுமில்லை. நாத்திகர்கள் இயற்கையை அர்றிணையாகப் பார்க்கிறார்கள், ஆத்திகர்கள் அவற்றை பல்வேறு தேவதைகளாகப் பார்கிறார்கள். இயற்கையோ, தேவதையோ காரணவஸ்துவுக்கு நன்றி பாராட்டித் துதிப்பது, பொருட்படுத்தாமல் விடுவதைக் காட்டிலும் சாலச்சிறந்ததன்றோ?!

Sunday 24 June 2012

Next part of Subhaasubha Mantrarta bhashyam

24-06-2012 இன்றைய பகுதி:


பெண்ணிடம் உள்ள அவலக்ஷணங்களைத் தர்பத்தால் துடைத்து நீக்குவதற்கான மந்த்ரம்:
இதமஹம் :- ஏ பெண்ணே! உன்னிடம் என்னைக் கொல்லக்கூடிய அலக்ஷ;மீ எனப்படும் அமங்கலத்தன்மை இருந்தால் அதை இந்த மந்திரத்தை ப்ரயோகித்து இந்த தர்பத்தால் துடைத்து அதை உன்னைவிட்டு அகலும்படியாகச் செய்கிறேன் (என்று பெண்ணின் இரு புருவங்களுக்கு மத்தியில் தர்ப்பையின் நுனியால் துடைத்து மேற்குப்புறம் எரிகிறான்). 

தங்களைப் பிரிந்து புக்ககம் செல்லும் பெண்ணின் பிரிவால் கண்ணீர்விடும் தாய் மற்ற பந்துக்களைப் பார்த்து ஆறுதலாகச் சொல்லப்படும் மந்த்ரம் :-
ஜீவாம்ருதந்தி :- இந்த திருமணம் என்னும் சுபகாரியத்தினால் பித்ருக்களும், தேவர்களும் த்ருப்தியடைந்து அநுக்ரஹமும், ஆசீர்வாதமும் செய்கிறார்கள். தம்பதிகளுக்கும் ஒருவரை ஒருவர் தழுவி மகிழும் ஆனந்தத்தையும், ஒருவருக்கொருவர் ஆதரவையும் அடைகிறார்கள். எனவே ஆனந்தமான இந்நேரத்தில் அபசகுனமாக அழுதல் கூடாது. கன்னிகையின் தாய் மற்றும் பந்துக்களே! 'இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருந்து எங்களை ஆசீர்வதிக்கின்றனர் என ஆண்டாள்  அருளிச்செய்துள்ளதை எண்ணிப்பாருங்கள்.  இவளை நான் மணந்து கொள்வதால் இந்த்ராதி தேவர்கள் மற்றும் இரு குடும்பத்தின் பித்ருக்களுக்கும் ஆனந்தம் அடைந்துள்ளனர், எனவே இந்த சுபமான வேளையில் இவளின் பிரிவுக்காக வருந்துவதை விடுத்து எங்கள் Nக்ஷமத்துக்காக அனைவரும் ப்ரார்த்தனை செய்யுங்கள்.
மணப்பென்னை நன்னீராட்ட நால்திசைத் தீர்த்தங்களைக் கொண்டுவரும்படி பார்பனச் சிட்டர்களை ப்ரார்த்தித்தல்: 
வ்யக்ஷத் க்ரூரம் :- இந்த ஜலத்தினால் இவளிடம் உள்ள கெடுதல் ஏற்படுத்தக்கூடிய தோஷங்கள் விலகட்டும். அப்படிப்பட்ட பரிசுத்தமான ஜலங்களை ப்ராஹ்மணர்கள் கொண்டு வரட்டும். இந்த ஸ்நாநத்தினால் இவள் ஸந்ததிகளை பாதிக்கக்கூடிய எந்த தோஷங்கள் இருந்தால் அனைத்தும் விலகட்டும். ஹே ப்ராம்மணோத்தமர்களே நீங்கள் நான்கு திசைகளிலும் சென்று கன்னிகையின் தோஷங்களை முற்றிலுமாக நீக்க வல்ல புனித தீர்த்தங்களை சேகரித்து வாருங்கள்.

பெண்ணின் தலையில் தர்பத்தால் செய்யப்பட்ட வளையத்தையும், அதன்மீத நுகத்தடியை வைத்து, அதன்மீது தங்கத்தை (திருமங்கல்யத்தை) வைத்து அதன்வழியாக தீர்த்தவிடும்போது சொல்லப்படும் மந்த்ரம்.

அர்யம்ண: :- இந்த தர்ப வளையம் சுற்றியிருப்பதுபோல், விவாஹ அக்னியைச்சுற்றி  ஆதிதயன் முதலான தேவர்களும் அனைத்து பந்துக்களும் இவளைச் சுற்றியிருந்து இந்த விவாஹ பந்தத்தை கண்டு ஆசீர்வதிக்கட்டும். சூர்யனை க்ரணங்கள் சூழ்ந்திருப்பதுபோல் பந்துக்களும் நண்பர்களுமாகிய இந்த ஸபையில் உள்ளோர் அனைவரும்  எங்களைச் சூழ்ந்திருந்து சூர்யாதி தேவர்களின் அநுக்ரஹத்திற்காக ப்ரார்த்திக்கும் இந்த வேளையில் என் கோரிக்கைகளை முழுமையாக அருளவேண்டும்படி தேவதைகளை நீங்களும் ப்ரார்த்தனை செய்யுங்கள்.

நுகத்தடி வைக்க மந்த்ரம்:
கேநஸ: கேரத: :- சசீ தேவியின் கணவனான இந்த்ர தேவனே! 'அபாலா" என்ற பெண்ணின் சரும நோயை, உம் தேரின் சக்கரம் - தேர் தட்டு - நுகத்தடி இவற்றிலுள்ள துவாரங்களின் வழியாக ஜலம் விட்டு அவளை நோயிலிருந்து விடுவித்து அழகுள்ள சரீரத்தை அடையும்படிச் செய்தாய். (அதுபோல் இந்தக் கன்னிகையின் சிரசில் வைக்கப்பட்டுள்ள நுகத்தடி துவாரத்தின் வழியாக சேர்க்கப்படும் புனித நீரால் இவளது தோஷங்களையும் போக்கியருளவேண்டும்.

ரிக் வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அபாலையின் கதை அல்லது வரலாறு:
தொழுநோய், சொரி, சிரங்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட அபாலை என்ற பெண்ணை எவரும் மணம்புரிய முன்வரவில்லை. அவள் மணம்புரிந்து கணவனுடன் ஸோமனை வழிபட ஆவலாய் இருந்தாள். இந்நிலையில் ஒரு தினம் அவள் ஒரு நதயின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள்.  அவ்வெள்ள நீரில் ஸோம தேவனுக்கு மிகவும் ப்ரியமான ஸோமரஸத்தைக் கொண்ட ஸோமலதை எனும் கொடி அவள் கையில் தற்செயலாகக் கிட்டியது. அவள் அதன் ரஸத்தை பல்லால் கடித்துப் பிழிந்து ஸோமனை த்யானித்து அவனுக்குச் ஸமர்ப்பித்தாள். இதனால் த்ருப்தியடைந்த இந்த்ரன், அவளை தன் தேர் சக்கரம், தேர்த்தட்டு, நுகத்தடி இவற்றின் வாயிலாக மந்திரிக்கப்பட்ட தீர்த்தத்தைச் செலுத்தி அவளை நல்ல அழகுள்ள ரூபவதியாக்கினான். 

நுகத்தடியில் ஸ்வர்ணத்தை (தற்போது திருமாங்கல்யம்) வைக்கும் மந்த்ரம்:
சந்தே ஹிரண்யம் :- ஏ பெண்ணே! மந்திர ஜலத்தின் ஸ்பரிசத்திற்காக உன் தலையில் வைக்கப்படும் இந்த ஸ்வர்ண மயமான தங்கமானது உனக்கு எல்லாவித நலன்களையும் அளிக்கட்டும்.  அபாலையை பரிசுத்தப்படுத்திய அதே மந்திரத்தால் நுகத்தடி வழியாக செலுத்தப்பட்டு, தங்கத்தில் தோய்ந்து உன் அங்கங்களை வந்தடையும் இந்த ப்ராஹ்மணர்களால் கொண்டுவரப்பட்ட பரிசுத்தமான புண்ணிய ஜலம் உன்னை ஸகலவிதமான தோஷங்களிலிருந்தும் விடுவித்து பரிசுத்மாக்கி என்னுடன் இரண்டறக் கலந்து எல்லா மங்கலங்களையும் அநுபவிப்போமாக.

பெண்ணை ப்ரோக்ஷpக்க ஐந்து மந்திரங்கள் :
1. ஹிரண்ய வர்ணா: :- ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று பெரிய பிராட்டியாரை வேதம் வர்ணிப்பதுபோல், திருமகளைப்போன்ற ஒளிபொருந்திய, தான் எப்போதும் சுத்தமானதும், அனைவரையும் சுத்தப்படுத்தி அனைத்துவித பாபங்கள் தோஷங்களிலிருந்தும் விடுவிக்க வல்லதுமான இந்த புண்ணிய தீர்த்தங்களால் ஸவிதா தேவன் உன்னை பரிசுத்தமாக்கட்டும். 

2. ஹிரண்யவர்ணா: :- இப்படிப்பட்ட தீர்த்தங்களால்தான் கச்யபன் எனும் சூரியன் உண்டானான்.  அக்நியும் இதிலிருந்துதான் தோன்றினார். எந்த தீர்த்தங்கள் தன்னுள் அக்னியை வைத்துள்ளதோ அந்த சுபமான தீர்த்தகங்கள் உனக்கு இம்மையிலும், மறுமையிலும் அனைத்து நலன்களையும் வழங்கட்டும். (அக்நின் கர்பம் ததிரே - என்று ஜலம் அக்னியைத் தன் கர்பத்தில் வைத்துள்ளது என வேதம் உத்கோஷிக்கிறது. இதன் பொருள் : ஜலம் என்பது இரண்டு ஹைட்ரஜன், மற்றும் ஒரு ஆக்ஸிஜன் ஆகிய வேதிப்பொருட்காளல் ஆனது என விஜ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். ஆக்ஸிஜன் இல்லாமல் அக்னி இல்லை). 

3. யாஸாம் ராஜா :- தீர்த்தத்திற்கு அதிபதியான வருண தேவன் ஜல மத்தியில் இருந்து கொண்டு, ஜனங்களின் புண்ய பாபங்களை பரிபாலித்து வருகிறாரோ, அந்த வருணனின் அநுக்ரஹத்தால் உனக்கு நன்மைகள் ஏற்படட்டும். 

4. யாஸாம் தேவா: :- எந்த தீர்த்தத்தை தேவர்களும் ஆஹாரமாக ஏற்கிரார்களோ, எந்த தீர்த்தங்கள் ஆகாயத்தில் மேக ரூபமாய்த் தவழ்கின்றனவோ, அந்த புண்ணிய ஜலங்களால் உனக்கு எல்லா சுகங்களும் கிட்டட்டும். 

5. சிவேநத்வா :-  ஏ பெண்ணே இந்த ஜலங்கள் உன்னை மங்கலகரமான சுபபார்வையை உன்மேல் செலுத்தட்டும். பரிசுத்தமான புண்ணியகரமான தன் தேஹங்களால் உன் தேஹத்தை நனைக்கட்டும். நெய் தாரையாய் விழுவதுபோல் உன்மேல் விழும் இந்த தீர்த்தங்கள் உனக்கு எல்ல அநுக்ரஹஙகளையும் செய்யட்டும். ஏ வதுவே மிகவும் மஹிமையுள்ள மங்களகரமான புனிதமான இந்த தீர்த்தங்கள் என் ப்ரார்தனைக்காக இங்கு சூழ்ந்துள்ள தேவதைகள் மற்றும் பெரியோர்களின் அருளாசியுடன் உன் சரீரத்தைச் சேர்தவுடன் நீ இனி இம்மியளவும் தோஷங்களற்றவளாய் மிகவும் புனிதமானவளாய் பரிசுத்தையாய் ஆக்கப்பட்டுவிட்டாய்  இனி அனைத்தும் உனக்கு மங்களங்களேயாகும்.
 

Saturday 23 June 2012

விவாஹ மந்த்ரார்த்தம்

ஶ்ரீ:
இன்று  தொடங்கி  சிறிது சிறிதாக  மந்திர அர்த்தங்களை  அனுப்பி வைக்கிறேன்.
குறிப்பு:- உ, ஊ, க்‌ஷே இந்த ஒலிகள் சரியாக இருக்காது.

விவாஹ மந்த்ரங்களை இந்த்ரன் அநுக்ரஹிக்க ஹேது
விவாஹ மந்த்ரார்த்தம்
முதல் ப்ரச்நம் - முதல் கண்டம்
வரப்ரேஷணமாவது விவாஹம் செய்துகொள்ள விரும்புகிறவன் நல்ல ப்ராஹ்மணர்களை பெண் பார்த்து வரச்சொல்லி, (நல்ல பெண் கிடைத்ததும்) அவள் பெற்றோரிடம் இது விஷயமாகப் பேசி முடித்து வருவதற்காக அனுப்புவதே வரப்ரேஷணம் ஆகும்.

ப்ரஸ{க்மந்தா :- துரிதமாகச் செல்லக் கூடியவர்களும் எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வல்லவர்களும் ஆன ப்ராஹ்மண உத்தமர்களே! நீங்கள் உடனே புறப்பட்டுச் சென்று கன்யையின் பிதாவைச் சந்தியுங்கள். அந்த கன்யையை நான் மணப்பதை இந்த்ர தேவனும் விரும்பி அநுக்ரஹிக்கிறான். ஏனெனில், கல்யாணமாகி தம்பதிகளாக நாங்கள் நடத்தப் போகும் ஸோம யாகத்தில் இந்த்ரனின் ப்ரீதிக்கான ஆகாரங்களை அளிப்போம் என்பதை அவன் அறிந்துள்ளான். 

தனக்காகப் பெண் தேடப்போகும் ப்ராஹ்மணர்களுக்கு வழியில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் இருக்க தேவதைகள் ப்ரார்த்திக்கப்படுகிறார்கள்.

அந்ருக்ஷரா: :- ஓ தேவதைகளே! எனக்காகப் பெண் தேடச் செல்லும் ப்ராஹ்மணர்கள் செல்லும் வழியில் கல், முள் போன்ற தொந்திரவுகள் ஏதுமின்றி நல்ல பாதையாக இருக்கச் செய்யுங்கள். அர்யமா, பகன் போன்ற தேவதைகள் எங்கள் தாம்பத்திய கோரிக்கையை நிறைவேற்றி வைக்கட்டும். 

கல்யாணம் நிச்சயமானபின் வரன் கன்னிகையைப் பார்;துச் சொல்லும் மந்திரம்:
அப்ராத்ருக்நீம் :- அப்ராத்ரு, அபதி, அபுத்ர என ஸஹோதரர்களின் நலனுக்காகவும், கணவனாகிய தன்னுடைய நலனுக்காவும், பெறப்போகும் புத்ரர்களின் நலனுக்காகவும் முறையே வருணன், ப்ருஹஸ்பதி, இந்ரனாகிய தேவர்களிடம் ப்ரார்த்தித்து இந்தக் கன்னிகையிடம் ஏதேனும் தோஷமிருந்து மேற்சொன்னவர்களை பாதிக்கக்கூடுமானால் அவற்றை நீக்கி நல்ல சுபலக்ஷணங்களை அளித்து அனைவருக்கும் Nக்ஷமத்தை ப்ரார்த்திக்கிறான்.

பெண்ணின் ஒவ்வோர் அங்கத்தையும் வரன் பார்ப்பதற்கான மந்த்ரம்:
அகோர சக்ஷ{: :- ஏ பெண்ணே! உன் கண்களால் பார்க்கப்படும் பார்வை தோஷங்களற்றவையாகவும் மங்களகரமாகவும் இருக்கட்டும். உன் கணவனை துன்புறுத்தாதவளாய் இரு. கணவனுக்கும், கணவனின் ஸஹோதரர்களுக்கும் இசைவான கருத்துடையவளாக விளங்குவாயாக. து}ய நல்லெண்ணங்கள் கொண்டவளாயிரு.