Friday 11 October 2013

ஆயுத பூஜை,விஜய தசமி

ஆயுத பூஜை,விஜய தசமி;.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5378-ஆயுத-பூஜை-விஜய-தசமி

Here is the message that has just been posted:
***************
*ஆயுத பூஜை,விஜய தசமி;
 -------------------------------------


Attachment 1394 (http://www.brahminsnet.com/forums/attachment.php?attachmentid=1394)

பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார்  கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது  அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து  வைத்திருந்தனர்.

 அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த  ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு  நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள்  ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக  கூறப்படுகிறது.

 நவம் என்றால்  ஒன்பது. அந்த வகையில் அன்னை சக்தி தேவியை 9 நாட்களும் வெவ்வேறு ரூபங்களில்  வழிபடும் மக்கள், மகிஷாசுரனை தேவியானவள் 9 நாட்கள் போரிட்டு வெற்றிவாகை  சூடிய நாளே விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது.

 மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றதையே இந்த நாள் குறிக்கிறது.

 விஜய் - வெற்றி; தசமி - பத்து (தசம் என்றால் பத்து). இதனையே விஜயதசமி  என்று கொண்டாடுகிறோம். எனவே 9 நாட்களும் விரதமிருந்து வழிபடுவோர், 10ம்  நாளான இன்று அன்னையின் வெற்றியைக் கொண்டாடி விரதத்தை முடித்துக் கொள்வதை  வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

 எனவே விஜய தசமி என்றால், வெற்றி  தருகிற நாள் என்று பொருள்படும்.குழந்தைகளுக்கு விஜயதசமி தினத்தன்று ஆரம்பக்  கல்வியை இந்த நாளில் ஆரம்பித்து வைப்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது.  மேலும் இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது  ஐதீகமாகும்.*


Source:
*அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.*
***************

Tuesday 8 October 2013

Five Types of NAVARATHRIS

NAVARATHRI       N A V A R A T H R I .FROM 5-10-2013 TO 13-10-2013.FOR THIS YEAR.         THE FIRST NINE DAYS AFTER THE NEW M.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/2373-NAVARATHRI-N-A-V-A-R-A-T-H-R-I-FROM-5-10-2013-TO-13-10-2013-FOR-THIS-YEAR-THE-FIRST-NINE-DAYS-AFTER-THE-NEW-M

Here is the message that has just been posted:
***************
Our festivals are celebrated  in tune with nature. One among them is Navarathri Celebrations.

In fact there are Five Navarathris to be celebrated five times a year. They are* Magha Navarathri, Vasantha Navarathri, Gupta Navarathri,Sharad Navarathri, and Pausha Navarathri.

*

Of the five,  *Sharad Navarathri* in the beginning of winter during month of Puratasi ( beginning of winter in September-October) is known as Maha Navarathri, celebrated all over the Country.,  the other one *Vasantha Navarathri *in the beginning of  spring(March-April) in the month of Chaitra is celebrated mostly in  Northern part of the Country.
The other Navarathris are celebrated at various parts of our Country in different forms.

The  beginning of summer and the beginning of winter are two very    important junctures of climatic change and solar influence. These two  junctions must have been chosen as the sacred opportunities for the  worship of the divine power  that provides energy for the earth    to move around the sun.



With Best Wishes for the Nine nights Festival.
Brahmanyan,
Bangalore.
***************

Sunday 6 October 2013

ஊளைச்-சதையை-குறைக்கும்-சோம்பு-நீர்

 ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5322-ஊளைச்-சதையை-குறைக்கும்-சோம்பு-நீர்

Here is the message that has just been posted:
***************
*ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்*

Attachment 1368 (http://www.brahminsnet.com/forums/attachment.php?attachmentid=1368)


இன்றைய காலகட்டத்தில் ஆண்கள்,  பெணகள், என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன்  அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது,  பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது. வீட்டுச் சாப்பாடு  இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு  அதிகரிப்பது போன்றவையாகும்

பெண்களைப் பொறுத்தவரை உடல்  உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி போதுமான சத்தான உணவு இல்லாததும், ஒரு  காரணமாக இருக்கிறது. இது தவிர அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது,  பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.


பப்பாளிக் காயைச் சமைத்து  உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக  காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா  கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை  குறையும்.

சுரைக்காய்  வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும் மேலும் சதை  போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து  காலையில் குடித்து வரவேண்டும்.

இதுதவிர  வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து  பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிக்கும் மேலாக  காலையில் அரைமணி நேர நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும். உடல்  எடையும் குறையும். புத்துணர்வாகவும் இருக்கும்.

ந*ன்*றி: பசுமை இ*ந்*தியா
***************

உடல் எடையை குறைக்க உதவும் வேர்க்கடலை..!

உடல் எடையை குறைக்க உதவும் வேர்க்கடலை..!.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5327-உடல்-எடையை-குறைக்க-உதவும்-வேர்க்கடலை-!

Here is the message that has just been posted:
***************
*உடல் எடையை குறைக்க உதவும் வேர்க்கடலை..!


*Attachment 1372 (http://www.brahminsnet.com/forums/attachment.php?attachmentid=1372)

 உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் வேர்க்கடலையும் ஒன்றாகும்.

 வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது.

 சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில் தான்  இருக்கிறது. மேலும் முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம்  வேர்க்கடலையில் இருக்கிறது.

 மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும்  பாஸ்பரஸ், பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம்,  இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும்  வேர்க்கடலையில் உள்ளன.

 எல்லாவிதமான இரத்தப் போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வேர்க்கடலையாகும்.

 உடல் பருமன் உள்ளவர்கள் உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால்,  சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த  வேர்க்கடலையைச் சாப்பிடவும்.

 இத்துடன் சர்க்கரை சோக்காத காபி  அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால்,  உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும்  படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.

 வயிற்றுப்போக்கு உடனே  கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது.  எல்லாவற்றையும்விட முக்கியமானது உடல் அழகும், இதயப் பாதுகாப்பும்.  வேர்க்கடலையில் உள்ள நியாஸின் தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும்,  இவை வராமல் முன்கூட்டியே தடுக்கிறது.

 எந்த வயதினரும் தினமும் அதிகபட்சம் 50 கிராம் வரை சாப்பிட்டால், செயலாற்றல் மிக்க மருந்தாக வேர்க்கடலை செயல்படும்.

 வேர்க்கடலையை அளவோடு சாப்பிடுவது அவசியம். அதிகமாகச் சாப்பிட்டால்  வயிற்றுக் கோளாறுகள் வரும். மேக நோய் இருந்தால் அது வீரியப்படும்.  நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும்.

 கல்லீரல் கோளாறு, மஞ்சள்காமாலை  நோய் முதலியவை இருந்தால் நோய் குணமாக வேர்க்கடலை சாப்பிட வேண்டும்.  நீரிழிவு உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் தொந்தரவு உள்ளவர்கள் நெருங்கக்கூடாத  பொருள் இந்த வேர்க்கடலையாகும்.


Source: Ayurvedam and Siddha Maruthuvam
***************

Saturday 5 October 2013

பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்

பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்...

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5314-பாம்பு-கடி-quot-பற்றிய-சில-தகவல்கள்

Here is the message that has just been posted:
***************
"பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..

1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா....??? இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...

2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா....??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி) காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..??? இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்... முதலுதவி:-

1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகி றது

4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துக ின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்

 5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்

 6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை. பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்..
***************

Wednesday 2 October 2013

Navaratri/Dusserah - powerful Stuti on Mata Chamunda.

Navaratri/Dusserah - powerful Stuti on Mata Chamunda.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5272-Navaratri-Dusserah-powerful-Stuti-on-Mata-Chamunda

Here is the message that has just been posted:
***************
Navaratri/Dusserah - powerful Stuti on Mata Chamunda
Dear All,
Greetings  and Namaste. May I wish you all a very happy Navaratri/Dusserah  festivities and Pujas. I had hoped to find time to codify a few very  hymns but unfortunately unable to. In order not to miss the occasion, I  am sending a short, sweet but powerful Stuti on Mata Chamunda By Lord  Rudra from Padma Puranam, Srishti Khanda, Chapter 31.


Navaratri signifies the triumph of right/good/dharma over evil/bad  where the Almighty also takes different forms towards this end. This is succinctly explained by *Lord Vishnu to Lord Adisesha in Padma Purana in Chyutapuri mahatmya* as below (it is a very long conversation running to two chapters).

*ekA shaktish ca shambhor viniyamana-vidhay sA caturdhA vibhinnA  |*
*krodhe kAlI vijAtA ca samara-samaye sA.abhavat tasya durgA |*
*bhoge sRRiShTau niyoge a sakala-jagatAM sA bhavAnI ca jAtA |*
*sarveShAM raxaNA.anugraha-karaNa-vidhau tasya viShNur bhavet sA ||*

*Meaning  : "... That Shakti took four forms to control the universe. In the  state of Krodha (anger) she is Kali, Durga the invincible in fights,  Bhavani as the one who leads this and for protecting the universe she  takes the form of Vishnu...."*

May We Seek The Blessings Of the Almighty Who is Praised In various feminine forms during this festivities.

Thanks & Regards,
K. Muralidharan (Murali)

​Please click the below link to download the pdf versions in Tamil and Sanskrit:
http://www.brahminsnet.com/forums/showthread.php/5272-Navaratri-Dusserah-powerful-Stuti-on-Mata-Chamunda




***************